இயக்குநர் சுந்தர்.சி நடிப்பில் உருவாகி இருக்கும் ’தலைநகரம் 2’ படத்தின் டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சுந்தர்.சி நடிப்பில், சுராஜ் இயக்கத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான படம் ’தலைநகரம்’. இப்படத்தில் ஜோதிமயி, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். டி.இமான் இசை அமைத்திருந்தார்.
இப்படத்தில் வடிவேலுவின் நாய் சேகர் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும், வணிகரீதியாகவும் இப்படம் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இந்தத் திரைப்படத்தின் 2வது பாகம் தற்போது உருவாகி உள்ளாது.
2வது பாகத்தை அஜித்தின் ‘முகவரி’, சிம்புவின் ‘தொட்டி ஜெயா’, பரத்தின் ‘நேபாளி’, ஷாமின் ‘6 கேண்டில்ஸ்’, சுந்தர்.சி நடித்த ‘இருட்டு’ ஆகிய படங்களை இயக்கிய வி.இசட்.துரை இயக்கி உள்ளார்.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ‘தலைநகரம்-2’ படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவுற்றது. சுந்தர்.சி. நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் சுந்தர்.சிக்கு ஜோடியாக பாலக் லால்வாணி நடித்துள்ளார்.
இந்தப் படத்திலும் வடிவேலு, யோகிபாபு, தம்பி ராமையா போன்ற காமெடி நடிகர்கள் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், ’தலைநகரம் 2’ படத்தின் டீசர் இன்று (டிசம்பர் 14) வெளியாகி உள்ளது. தலைநகரம் படத்தைப்போலவே இந்த படத்திலும் மீண்டும் ரத்தக்களறியுடன் கெத்து காட்டி இருக்கிறார் சுந்தர்.சி.
இந்தப் படத்தில் சுந்தர்.சி பேசும் ஒவ்வொரு வசனங்களும் பட்டையைக் கிளப்புகின்றன. குறிப்பாக, ‘எட்டு வயசுல பசியில செத்து இருக்க வேண்டியது, 18 வயசுல என் உடம்புல கத்தி படாத இடமே இல்லை’ உள்ளிட்ட வசனங்கள் மாஸ் காட்டுகின்றன.
’தலைநகரம்’ படத்தைப் போலவே இப்படமும் முழுக்க முழுக்க ரத்த வாடை வீசியிருக்கிறது. இன்று வெளியான இப்படத்தின் டீசர், இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜெ.பிரகாஷ்
தந்தையைப் போலவே முதல் போட்டியில் சதமடித்த டெண்டுல்கர் மகன்!
சீனியாரிட்டி பட்டியல்: 10வது இடத்தில் உதயநிதி ஸ்டாலின்