அதே சத்தம்… மஞ்சும்மல் பாய்ஸை கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்!

Published On:

| By christopher

மலையாளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம், கேரளாவை விட கடந்த மார்ச் மாதம் முழுவதும் தமிழ்நாட்டு தியேட்டர்களில் வசூல் வேட்டை நடத்தியது.

சிதம்பரம் இயக்கத்தில் கடந்த  2006-ம் ஆண்டு கொடைக்கானல் குணா குகையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவான இந்த படத்தில் இடம்பெற்ற ‘கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே…’ பாடலால் தமிழ்நாட்டு மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

வெறும் ரூ.5 கோடி செலவில் எடுக்கப்பட்ட ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் உலகளவில் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய முதல் மலையாள படம் என்கிற சாதனையை படைத்தது.

தமிழில் டப் செய்து வசூல் சாதனை செய்த இப்படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு நேற்று ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் திரையரங்குகளில் வெளியானது. இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிட்டுள்ளது.

அங்கு படத்திற்கு எப்படி எதிர்பார்ப்பு இருக்கும் என்று சந்தேகம் எழுந்த நிலையில், தற்போது தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரும் வரவேற்பை மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் பெற்றுள்ளது.

குகைக்குள் தவறி விழுந்த நண்பன் மீட்கப்படும்போது, தமிழ்நாட்டு ரசிகர்களை எப்படி கண்மணி பாடலும், காட்சியும் ஈர்த்ததோ, டோலிவுட்டையும் தற்போது கவர்ந்துள்ளது.

குறைவான தியேட்டர்களில் மட்டுமே ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், தற்போது பல இடங்களில் மஞ்சும்மல் பாய்ஸ் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடுவதால், திரையரங்குகளின் எண்ணிக்கையும், காட்சியும் அதிகரித்து வருவதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

முதல் வெற்றியை பதிவு செய்த மும்பை அணி… பெருமூச்சு விட்ட ஹர்திக் பாண்டியா

டிஜிட்டல் திண்ணை: சிக்கிய 4 கோடி, நயினாரை போட்டுக் கொடுத்தது யார்? நெல்லை தேர்தல் நிறுத்தப்படுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment