தீபாவளி பண்டிகை என்றாலே டாப் ஹீரோக்களின் படங்கள் மற்றும் பிரபல இயக்குனர்களின் படங்கள் ரிலீசுக்கு ரெடியாகி விடும்.
அந்த வகையில் இந்த தீபாவளிக்கு தமிழ் சினிமாவில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் இணைந்து நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தியின் ஜப்பான், விக்ரம் பிரபுவின் ரெய்டு, காளி வெங்கட்டின் கிடா ஆகிய படங்கள் வெளிவர உள்ளது.
இதேபோல் தெலுங்கு சினிமாவில் எந்தெந்த படங்கள் வெளியாக உள்ளது என்ற லிஸ்ட்டை பார்த்தால் மிக பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாக வில்லை.
‘அலா நின்னு சேரி’ என்ற ஒரே ஒரு நேரடி தெலுங்குப் படம் மட்டும் தான் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை ( நவம்பர் 10) வெளியாக உள்ளது. இந்த படத்துடன் வெளியாக உள்ள மற்ற படங்கள் எல்லாமே தமிழ் படங்களான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ஜப்பான், கிடா ஆகிய படங்களின் டப்பிங் வெர்ஷன் தான். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் ஜப்பான் படங்களின் டப்பிங் வெர்ஷன் நாளை நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது. கிடா படம் தெலுங்கில் “தீபாவளி” என்ற பெயரில் நவம்பர் 11 ஆம் தேதி வெளியாகிறது. மேலும் சல்மான் கானின் டைகர் 3 படத்தின் தெலுங்கு வெர்ஷன் நவம்பர் 12 ஆம் தேதி வெளியாகிறது.
தீபாவளிக்கு ஒரே ஒரு நேரடி தெலுங்கு படத்துடன் இத்தனை டப்பிங் படங்கள் வெளியாவதால் இந்த தீபாவளியை டப்பிங் படங்களுடன் தான் தெலுங்கு சினிமா ரசிகர்கள் கொண்டாட வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தங்கம் தென்னரசு வழக்கு: இறுதி விசாரணை எப்போது?
காரில் இருந்து அதிமுக கொடியை அகற்றிய ஓபிஎஸ்