நண்பர்கள் என்று திரையுலகில் உலவி வந்த மூத்த நடிகர்களான நரேஷ்-பவித்ராவின் திருமணத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சினிமா நட்சத்திரங்களை பொறுத்தவரை நாங்கள் காதலிக்கவில்லை என்று கூறியவர்கள் எல்லாம் அடுத்த சில மாதங்களில் திருமணம் செய்துகொள்வது வாடிக்கையாக நடந்து வருகிறது.
தெலுங்கு திரையுலகைச் சேர்ந்தவர் நடிகர் நரேஷ். இவர் தமிழில் ’பணமா பாசமா’ படத்தில் இடம்பெற்ற ’எலந்த பழம்’ பாடலை பாடி பிரபலமான மறைந்த நடிகை விஜய நிர்மலாவின் மகன் ஆவார்.
நரேஷ் ஏற்கனவே மூன்று முறை திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். தற்போது அவருக்கு 60வயது ஆகிறது. இந்த நிலையில் நரேசுக்கும், கன்னட நடிகை பவித்ரா லோகேசுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.
நடிகை பவித்ரா தமிழில் விஷால் நடிப்பில் வெளியான அயோக்யா, விஜய்சேதுபதியின் நடிப்பில் வெளியான க.பெ.ரணசிங்கம், ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்த வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.
44வயதான பவித்ராவும் ஏற்கனவே திருமணமாகி கணவரை விவாகரத்து செய்தவர் தான். தற்போது பவித்ராவுக்கு 44வயது ஆகிறது. சமீபத்தில் நரேசும் பவித்ராவும் ஓட்டலில் ஒரே அறையில் தங்கி இருந்தனர்.
இதனை அறிந்த நரேசின் முன்னாள் மனைவி செருப்புடன் வந்து பவித்ராவை அடிக்க பாய்ந்த வீடியோ காட்சி தொலைக்காட்சி இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பானது.
இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, ”திரைப்படங்களில் இணைந்து நடிக்கிறோம். அதனால் ஏற்பட்ட அறிமுகத்தினால் நண்பர்களானோம். வேறு எந்தவிதமான உறவும் இல்லை என இந்த பூனையும் பால் குடிக்குமா என்கிற தொனியில் கன்னட நடிகை பவித்ராவும், தெலுங்கு நடிகர் நரேஷும் கூறிவந்தனர்.
இந்த நிலையில் நரேஷ்-பவித்ரா திருமணம் நேற்று நடந்துள்ளது. இருவரும் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்ட வீடியோவை வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளனர்.
இவர்கள் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இராமானுஜம்
அதிமுகவை அழிக்க போராடும் திமுகவின் ‘பி’ டீம் – எடப்பாடி ஆதங்கம்
அமலாக்கத்துறை அறிவிப்பு: பஞ்சநாமா பட்டியலை வெளியிட தேஜஸ்வி கோரிக்கை!