சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (செப்டம்பர் 4) நடைபெற்று வரும் தமிழக அரசின் திரைப்பட விருது வழங்கும் விழாவில் திரைப்பட கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
தமிழக அரசின் திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் மற்றும் எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா,
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (செப்டம்பர் 4) மாலை 5 மணிக்குத் தொடங்கியது. இவ்விழாவில் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சேகர் பாபு, சாமிநாதன், சென்னை மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்று விருதுகள், பரிசுகளை வழங்கினர்.
வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கையால் விருதுகள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், விருது வழங்கும் விழாவிற்கு முதலமைச்சர் வருகை தரவில்லை.
விருது பெற்ற கலைஞர்கள் தமிழக அரசு விருதை பெறுவது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளனர். அதேநேரம் இந்த விருதை பெறுவது நீண்ட நாள் காத்திருப்பிற்கு பிறகு நடந்திருக்கிறது என்றும், முதலமைச்சர் கையால் விருது பெறாமல் போனது கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
திரைப்பட விருதுகள்
இவ்விழாவில் 2009 முதல் 2014-ம் ஆண்டு வரை தேர்வு செய்யப்பட்ட சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.1 லட்சம், மூன்றாம் பரிசு ரூ.75 ஆயிரம், சிறந்த படத்திற்கு சிறப்பு பரிசு ரூ.75 ஆயிரம் என 23 தயாரிப்பாளர்களுக்கு ரூ.26.25 லட்சத்துக்கான காசோலை, சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என 160 பேருக்கு தலா 5 பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.
விருதுகள் பெறும் திரைப்படம், நடிகர், நடிகை, இயக்குநர்:
2009
- சிறந்த படங்கள் – பசங்க, நையாண்டி குடும்பத்தார், அச்சமுண்டு அச்சமுண்டு
- சிறந்த நடிகர் நடிகை – கரண் (மலையன்)
- சிறந்த நடிகை – பத்மப்ரியா (பொக்கிஷம்)
- சிறந்த இயக்குநர் – வசந்தபாலன்
- சிறந்த வில்லன் – பிரகாஷ்ராஜ்
2010
- சிறந்த படங்கள் – மைனா, களவாணி, புத்ரன்
- சிறந்த நடிகர் நடிகை – விக்ரம் (ராவணன்)
- சிறந்த நடிகை – அமலாபால் (மைனா)
- சிறந்த இயக்குநர் – பிரபுசாலமன்
- சிறந்த வில்லன் – எஸ். திருமுருகன் (களவாணி)
2011
- சிறந்த படங்கள் – வாகைசூடவா, தெய்வத்திருமகள், உச்சிதனை முகர்ந்தால்
- சிறந்த நடிகர் நடிகை – விமல் (வாகைசூடவா)
- சிறந்த நடிகை – இனியா (வாகைசூடவா)
- சிறந்த இயக்குநர் – ஏ.எல்.விஜய்
- சிறந்த வில்லன் – பொன்வண்ணன் (வாகைசூடவா)
2012
- சிறந்த படங்கள் – வழக்கு எண் 18/9, சாட்டை, தோனி
- சிறந்த நடிகர் நடிகை – ஜீவா (நீ தானே என் பொன்வசந்தம்)
- சிறந்த நடிகை – லட்சுமி மேனன் (கும்கி, சுந்தரபாண்டியன்)
- சிறந்த இயக்குநர் – பாலாஜி சக்திவேல்
- சிறந்த வில்லன் – விஜய் சேதுபதி (சுந்தரபாண்டியன்)
2013
- சிறந்த படங்கள் – ராமானுஜன், தங்கமீன்கள், பண்ணையாரும் பத்மினியும்
- சிறந்த நடிகர் நடிகை – ஆர்யா (ராஜா ராணி)
- சிறந்த நடிகை – நயன்தாரா (ராஜா ராணி)
- சிறந்த இயக்குநர் – ராம்
- சிறந்த வில்லன் – விடியல் ராஜூ (ஆள்)
2014
- சிறந்த படங்கள் – குற்றம் கடிதல், கோலிசோடா, நிமிர்ந்து நில்
- சிறந்த நடிகர் – சித்தார்த் (காவியத் தலைவன்)
- சிறந்த நடிகை – ஐஸ்வர்யா ராஜேஷ் (காக்கா முட்டை)
- சிறந்த இயக்குநர் – ராகவன்
- சிறந்த வில்லன் – பிரிதிவிராஜ் (காவியத் தலைவன்)
சின்னத்திரை விருதுகள்
சின்னதிரை விருதுகள் 2009 முதல் 2013-ம் ஆண்டு ஒளிபரப்பான வரை சிறந்த நெடுந்தொடர்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.1 லட்சம், சிறந்த வாழ்நாள் சாதனையாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் என ரூ.25 லட்சத்துக்கான காசோலையும், சிறந்த கதாநாயகன் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என 81 பேருக்கு தலா 3 பவுன் தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது.
தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள்!
தமிழக அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் 2008-2009 கல்வியாண்டு முதல் 2013-2014 கல்வியாண்டு வரை பயின்ற மாணவர்கள் தயாரித்த சிறந்த குறும்படங்களின் மூலம் சிறந்த இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், ஒலிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், என 30 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.1.50 லட்சத்துக்கான காசோலை, ஒருபவுன் தங்கப்பதக்கம் ஆகியவை வழங்கப்படுகிறது.
மோனிஷா
அரசு விருது பட்டியலில் நயன்தாரா, ஆர்யா, ஐஸ்வர்யா ராஜேஷ், திருமதி செல்வம்