உங்களை ஏன் நீக்கக் கூடாது?: பாக்யராஜுக்கு நடிகர் சங்கம் கேள்வி!

சினிமா

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நாசரை எதிர்த்து தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த இயக்குநர் பாக்யராஜுக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

2019ல் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வெற்றியடைந்து நாசர் விஷால், கார்த்தி உள்ளிட்ட பாண்டவர் அணியினர் கடந்த மார்ச் மாதம் பதவியேற்றுக்கொண்டனர்.

கே.பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினர் தோல்வி அடைந்தனர்.

இந்நிலையில் நேற்று பாக்யராஜுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அதில், “சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்றுக்கொண்ட நிலையில்,

தாங்கள் நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தைப் பற்றியும், தேர்தல் குறித்தும் பொய்யான, உண்மைக்குப் புறம்பான கருத்துகளை நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களுக்குக் கடிதம் மூலம் பரப்பி வருகிறீர்கள்.

காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், சில உறுப்பினர்களின் தூண்டுதலின் பேரிலும் நடிகர் சங்கத்தில்,

பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் மீது அவர்களின் சமூக அந்தஸ்தைச் சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த செயலை செய்துள்ளீர்கள்.

சங்கத்தின் சட்ட விதிகளுக்கு முரணாக இதைச் செய்து இருக்கிறீர்கள். சங்க உறுப்பினர்கள் சிலர் தங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கடிதம் அனுப்பி உள்ளனர்.

இது குறித்து சங்கத்தின் செயற்குழுவில் விவாதித்து தங்களைச் சங்க உறுப்பினர் பதவியிலிருந்து ஏன் நீக்கக் கூடாது என்று விளக்கம் பெற முடிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் உங்களைச் சங்கத்திலிருந்து ஏன் நீக்கக் கூடாது என்று விளக்கம் கேட்டு இந்த கடிதம் அனுப்பப்படுகிறது.

15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். விளக்கம் அளிக்காத பட்சத்தில் அல்லது தங்கள் விளக்கம் ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில்,

தங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் என்கிற முறையில் கடிதத்தில் விஷால் கையொப்பமிட்டுள்ளார்.

சம்பளத்தை உயர்த்திய சமந்தா

+1
1
+1
3
+1
0
+1
4
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *