தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி தன்னை எதிர்த்து போட்டியிட்ட டி. மன்னனை காட்டிலும்133 வாக்குகள் அதிகம் பெற்று தலைவராகியுள்ளார்.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2023 – 2026ம் ஆண்டுக்கான தேர்தல் சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஜானகி ராமச்சந்திரன் கலைக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. காலை 9 மணிக்கு துவங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.
இந்நிலையில் பதிவானவாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 9.30 மணி அளவில் தொடங்கியது.
இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி பதிவான 1111 வாக்குகளில் 615 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட டி. மன்னன் 482 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
133 வாக்குகள் வித்தியாசத்தில் முரளி ராமசாமி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட்ட கதிரேசன் – 615, ராதாகிருஷ்ணன்-502 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றனர்.
இவர்களை எதிர்த்து போட்டியிட்ட கமீலா நாசர்-450 வாக்குகளும், தேனப்பன்-420 வாக்குகளும் பெற்று தோல்வியடைந்தனர்.
துணை தலைவர் பதவிக்கு லைகா தமிழ்குமரன்- 537 வாக்குகளும், அர்ச்சனா கல்பாத்தி-485 வாக்குகளும் பெற்று வெற்றிபெற்றனர்.
இணைசெயலாளர் பதவிக்கு போட்டியிட்ட சௌந்தர் – 511 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட சந்திரபிரகாஷ் ஜெயின் – 535வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட சிங்காரவடிவேலன்-236 லிப்ரா ரவீந்தர்-229வாக்குகளை பெற்றனர்.26 செயற்குழு உறுப்பினர்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நள்ளிரவுக்குள் வெளியாகும் என தெரிகிறது.
சினிமா சங்க தேர்தலில் பண நாயகம் : போட்டியாளர் இசக்கிராஜா
மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்: திமுக ஆதரவு!