தயாரிப்பாளர் சங்க தேர்தல் தேதி அறிவிப்பு: முழு விவரம்

சினிமா

தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தல் 26.03.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08.00 மணி முதல் மாலை 04.00 மணிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பின் அத்தேர்தல் குறித்து தற்போதைய செயலாளர் மன்னன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததால் தேர்தல் தள்ளிப்போனது.

அதன்பின் நேற்று மாலை தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

27.3.2023 காலை 11.00 மணி முதல் 29.03.2023 மாலை 5.00 மணிவரை வேட்புமனு தாக்கலுக்கான விண்ணப்பங்கள் சங்க அலுவலகத்தில் வழங்கப்படும்.( ரூபாய் 100 செலுத்தி சங்க அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்).

30.03.2023 காலை 11.00 மணி முதல் 03.04.2023 மாலை 4.00 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சங்க அலுவலகத்தில் மூடி முத்திரை வைக்கப்பட்டுள்ள பெட்டியில் சேர்த்துவிட வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்ப படிவங்கள் அனைத்தும் சங்க அலுவலகத்தில் மூடி முத்திரையிட்ட பெட்டியில் 03 -04.2023 மாலை 5.00 மணிக்கு சீல் வைக்கப்படும்.

05.04.2023 காலை 10.00 மணி முதல் 06.04.2023 மாலை 04.00 மணிவரை வேட்புமனு விண்ணப்பங்களை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். மாலை 04.00 மணிக்கு மேல் விண்ணப்பங்களை திரும்பப்பெற இயலாது.

07.04.2023 அன்று மாலை 06.00 மணிக்கு இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.

தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தல் 30.04.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08.00 மணி முதல் மாலை 04.00 மணிவரை நடைபெறும்.

01.05.2023 அன்று காலை 10 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

தேர்தலில் போட்டியிடும் உறுப்பினர்களுக்கான கட்டண விவரம் பின்வருமாறு-;

  1. தலைவர் 1
  2. துணைத்தலைவர்கள் 2
  3. செயலாளர்கள் 2
  4. பொருளாளர் 1
  5. இணைச்செயலாளர் 1
  6. செயற்குழு உறுப்பினர்கள் 26

1. தலைவர் பதவிக்கு ரூபாய் 1,00000

2. மற்ற நிர்வாகிகள் பதவிக்கு ரூபாய் 50,000

3.செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ரூபாய் 10,000

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது

நடைபெறவுள்ள தேர்தலில் தற்போதைய தலைவர் முரளி ராமசாமி தலைமையில் ஒரு அணியும், தற்போதைய செயலாளர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடும் என கூறப்பட்டு வந்த நிலையில் இந்த இரு அணிகளுடன் இணைந்து செயல்பட முடியாதவர்கள் மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இராமானுஜம்

பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிக்கை உயர்வு!

வெளியீட்டுக்கு முன்பே லாபம் ஈட்டிய ‘சொப்பன சுந்தரி’

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *