தெலுங்கு சினிமா ரசிகர்களால் ‘கிங்’ என்று கொண்டாடப்படுபவர் நடிகர் நாகார்ஜூனா. தெலுங்கு சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார்.
தற்போது நடிகர் நாகார்ஜூனா தனது 99வது படமான “நான் சாமி ரங்கா” படத்தில் நடித்து வருகிறார். 2019 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி செம ஹிட் அடித்த “Porinju Mariam Jose” படத்தின் தெலுங்கு ரீமேக் தான் “நான் சாமி ரங்கா” படம்.
மேலும் நடிகர் தனுஷின் 51வது படத்திலும் நடிகர் நாகார்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் நாகார்ஜுனா தனது 100வது படத்திற்கான கதை கேட்கும் பணியைத் தொடங்கிவிட்டார். பல தெலுங்கு சினிமா இயக்குனர்கள் நாகார்ஜுனாவிடம் கதை சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழில் மூடர் கூடம் படம் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இயக்குனரும் நடிகருமான நவீனுக்கும் நடிகர் நாகார்ஜுனாவிடம் கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
தற்போது கிட்டத்தட்ட இயக்குனர் நவீனின் கதையை நாகார்ஜுனா ஓகே சொல்லிவிட்டதாகவும், இறுதி கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இயக்குனர் நவீன் மூடர்கூடம் படத்திற்குப் பிறகு “அலாவுதீனின் அற்புத கேமரா” என்ற படத்தை இயக்கி இருந்தார். ஆனால் அந்த படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது. அதேபோல் விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் “அக்னி சிறகுகள்” என்ற ஆக்சன் படத்தையும் இயக்கியிருந்தார். ஆனால் அந்த படமும் இன்னும் வெளியாக வில்லை. ஒருவேளை நாகார்ஜுனாவின் 100வது படம் நவீனுக்கு கைகொடுத்தால் நிச்சயம் அவருடைய சினிமா வாழ்க்கையில் ஓர் புதிய திருப்பம் ஏற்படும்.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
ஐந்து மாநில தேர்தல்: கருத்துக்கணிப்பு முடிவுகள் இதோ!
‘முட்புதர்கள், குப்பைகளால் சூழப்பட்ட வேலூர் கோட்டை: விடிவு எப்போது?