நடிகை நயன்தாரா கல்லூரி விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை ரசிகர்கள் லேடி சூப்பர்ஸ்டார் என்றும் அழைக்கின்றனர்.
நடிகை நயன்தாரா பொதுவாக எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. இந்நிலையில், இன்று (பிப்ரவரி 6 ) கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

வைல்ட் நிற ட்ரான்ஸ்பரென்ட் சேலையில், கொண்டை போட்டு அதில் மல்லி பூ வைத்து, சென்னையில் உள்ள சத்யபாமா பல்கலைகழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கண்கவர் அழகில் கலந்து கொண்டுள்ளார்.

சத்யபாமா பல்கலைகழகம் தன்னுடைய 35 ஆம் ஆண்டு வெற்றிவிழாவை கொண்டாடுகிறது.
இந்த பல்கலைகழகத்தின் அம்பாசிடராக நடிகை நயன்தாரா உள்ள நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அங்குள்ள மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பேசியுள்ளார்.

அப்போது பேசிய நயன்தாரா ’’லைப்ல எப்போதுமே ஹாப்பியா இருங்க. ரொம்ப ஸ்ட்ரெஸ் எடுக்காதீங்க..
எப்படி இருந்தாலும், எல்லாரும் லைப்ல சக்ஸஸ் ஃபுல்லா இருப்பீங்க, அந்த சக்ஸஸ் நாளைக்கு வரும் போது, அன்று வருத்தப்பட்ட நேரங்கள் குறித்து கவலை கொள்வீர்கள் என பேசியுள்ளார்.
இதனிடையே, இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
’தீ தளபதி’ 300 கோடி வசூல் கிளப்பில் இணைந்த வாரிசு!
பள்ளி மாணவிகளை பணக்காரர்களுக்கு விருந்து படைத்த கொடூரம்: மூடி மறைப்பது யார்?