பல கோடி மதிப்புள்ள பான் மசாலா விளம்பரத்தில் நடிக்க மறுத்துள்ளதாக ஆஜ்தக் இந்தி சேனல் நடிகர் மாதவன் பற்றி செய்தி வெளியிட்டுள்ளது.
நடிகர் மாதவன் மாடலாக இருந்து திரையுலகுக்கு வந்தவர். தமிழில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர். தற்போது, 56 வயதானாலும் உடலை கட்டுக் கோப்பாக வைத்திருப்பவர். பாலிவுட்டில் கால் பதித்து அசத்தியவர். தற்போது, மாதவன் பற்றி ஆஜ்தக் இந்தி சேனல் வியப்புக்குரிய செய்தி வெளியிட்டுள்ளது. அதில், கூறியிருப்பதாவது,
பாலிவுட்டில் பல நடிகர்கள் பான் மசாலா விளம்பரத்தில் நடித்துள்ளனர். ஷாருக்கான், அக்ஷய் குமார், அஜய் தேவ்கான் ,ஹிரித்திக் ரோஷன் போன்றவர்கள் கூட பான் மசாலா விளம்பரங்களில் நடித்துள்ளனர். தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன், மகேஷ் பாபு ஆகியோரும் பான் மசாலா விளம்பரங்களில் தோன்றியுள்ளனர்.
ஆனால், நடிகர் மாதவன் பான்மசாலா விளம்பரத்தில் நடிக்க மறுத்துள்ளார். பிரபல பான்மசாலா நிறுவனம் ஒன்று பல கோடி தருவதாக கூறி தங்கள் விளம்பரத்தில் நடிக்க அவரை வற்புறுத்தியுள்ளது. ஆனால், அவரோ பணம் முக்கியமல்ல. எனது, ரசிகர்களை தவறான வழிக்கு செல்ல நான் காரணமாக இருக்க மாட்டேன் என்று கூறி மறுத்து விட்டார்.
சமீபத்தில் நடிகர் ஜான் ஆபிரஹாமும், பான் மசாலா விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்களை விமர்சித்திருந்தார். ரசிகர்களின் உயிருடன் நடிகர்கள் விளையாடுவதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
தங்கம் விலை சரிவு…நகை பிரியர்கள் மகிழ்ச்சி!
ரூ.3 கோடி கடன்: வட்டியுடன் செலுத்த நடிகர் விமலுக்கு உத்தரவு!