சிவ பக்தராக நடிக்கும் தமன்னா: ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

சினிமா

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பல ஹிட் படங்களின் மூலம் சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோயினாக வலம் வருபவர் நடிகை தமன்னா. ]Movie First Look

கடந்த ஆண்டு வெளியான நடிகர் ரஜினியின் ஜெயிலர் படத்தில் ஒரு கேமியோ பாத்திரத்தில் நடித்த தமன்னாவிற்கு மீண்டும் தமிழ் படங்களில் அதிக வாய்ப்பு கிடைக்க தொடங்கியுள்ளது. சுந்தர்.C இயக்கத்தில் தமன்னா நடிப்பில் அரண்மனை 4 படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

மேலும், நடிகர் திலீப் உடன் இணைந்து நடித்த தனது முதல் மலையாள படமான பந்தரா (Bandra) மூலம் மலையாள ரசிகர்களின் கவனத்தையும் தமன்னா ஈர்த்துள்ளார்.

கடந்த 2022ல்  வெளியாகி சூப்பர் ஹிட்டான “ஒடேலா ரெயில்வே ஸ்டேஷன்” படத்தின் இரண்டாம் பாகமான ‘ஒடேலா – 2’ படத்தில் தற்போது நடிகை தமன்னா கதையின் நாயகியாக நடிக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய அசோக் தேஜா தான் இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். இந்த படத்தை பல மொழிகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

ஒடேலா 2 படத்தை மது கிரியேஷன்ஸ் மற்றும் சம்பத் நந்தி டீம்வொர்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

இந்த படத்தில் ஹெபா பட்டேல், வசிஷ்டா என். சிம்ஹா, யுவா, நாக மகேஷ், வம்சி, சுரேந்தர் ரெட்டி, பூஜா ரெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த படத்தில் சிவசக்தி என்ற கதாபாத்திரத்தில் நடிகை தமன்னா நடித்துள்ளார். ஒரு கையில் கோலும் மற்றொரு கையில் உடுக்கையுமாக வித்தியாசமான தோற்றத்தில் நடிகை தமன்னா இடம்பெற்றுள்ள இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீப காலமாக நடிகை தமன்னா அடிக்கடி ஆன்மிக தலங்களுக்கு சென்று வழிபாடு செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒடேலா 2 படத்தை தொடர்ந்து வேதா மற்றும் ஸ்திரீ 2 ஆகிய இரண்டு ஹிந்தி படங்களில் தமன்னா பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பாலையாவின் வேட்டை ஆரம்பம்: NBK 109 வீடியோ இதோ!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: சீஸ் ஸ்டஃப்டு குடமிளகாய்

J Baby : ஜெ பேபி – திரை விமர்சனம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *