ரஜினியின் ‘ஜெயிலர்’படத்தில் இணைந்தார் தமன்னா

Published On:

| By Jegadeesh

ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்’ படத்தில் தமன்னா இணைந்துள்ள தகவலை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’, போன்ற படங்களை இயக்கிய, இயக்குனர் நெல்சன் திலீப் குமார் விஜய்யை வைத்து ‘பீஸ்ட்’ படத்தை இயக்கி முடித்த பின்னர், தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்‘ படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில், இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்தப்படம் குறித்து அவ்வப்போது சில தகவல்களை வெளியிட்டு வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம், ஜனவரி 17ஆம் தேதி இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதை தொடர்ந்து நடிகை தமன்னா ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்கிற தகவல் ஏற்கனவே வெளியானாலும், இதுவரை உறுதி செய்யப்படாமல் இருந்த நிலையில்… தற்போது தமன்னா இப்படத்தில் இணைத்துள்ளதை சன் பிச்சர்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

https://twitter.com/sunpictures/status/1616050345821761537?s=20&t=dDJ8VBxMaDWwS2yQefDFJw

மேலும் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணா, சிவராஜ் குமார், மோகன்லால், விஜய் வசந்த், யோகி பாபு, ரோபோ ஷங்கர், உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். முத்துவேல் பாண்டியன் என்கிற கேரக்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு 65 சதவீதம் முடிவடைந்து விட்ட நிலையில், மீதமுள்ள காட்சிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

’’மகளிர் ஆணைய தலைவிக்கே பாதுகாப்பு இல்லை’’ கொந்தளித்த சுவாதி மாலிவால்

மலிவான விமர்சனங்கள்: பிரியா பவானி சங்கர் ஆவேசம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share