கேரவனில் தனக்கு நேர்ந்த அந்தச் செயலால் தான் மிகவும் மனமுடைந்ததாக நடிகை தமன்னா கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் படங்களில் நடித்து வரும் தமன்னா அவ்வப்போது பாலிவுட்டிலும் முகம் காட்டிவருகிறார்.
சமீபத்தில் பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை தமன்னா பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது,
“ஒரு படபிடிப்பில் நான் என்னுடைய கேரவனில் இருக்கும்போது, எனக்கு பிடிக்காத சம்பவம் ஒன்று நடந்தது.அதன் காரணமாக நான் மிகவும் மனம் உடைந்தேன். இதனால் என் கண்கள் குளமாகின. அந்த நேரத்தில் எனக்கு படப்பிடிப்பும் இருந்தது.
அதனால் ,என்னால் அந்த இடத்தில் அழ முடியவில்லை. அப்போது, அழவும் முடியாது. உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என என்னிடம் நானே சொல்லிக் கொண்டேன். பின்னர் இந்தக் கடினமான உணர்வுகளை மகிழ்ச்சியானதாக நான் மாற்றிக் கொண்டேன்.இந்தச் சம்பவத்தின் போது கண்ணாடியில் என்னை நானே பார்த்துக்கொண்டு தேற்றிக் கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
எனினும், எங்கு வைத்து எந்த படபிடிப்பில் கேரவனில் என்ன விரும்பத்தகாத சம்பவம் நடந்தது என்பதை தமன்னா கூறவில்லை.