இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இந்த படத்தின் முக்கிய அறிவிப்புகள் எதுவும் இன்னும் வெளியாக வில்லை என்றாலும், அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட அஜித் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அஜித்தின் 63 வது படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருப்பதாகவும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது என்றும் இந்தப் படத்தின் அலுவலக பூஜை சென்னையில் பொங்கல் அன்று நடைபெற்றதாகவும் தகவல் வெளியானது.
மேலும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளதாகவும், நடிகர் எஸ்.ஜே.சூர்யா AK 63 படத்தில் அஜித்திற்கு வில்லன் ஆக நடிக்க போகிறார் என்றும் நடிகர் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது AK 63 படத்தில் ஒரு முக்கிய நடிகை இணைந்துள்ளதாக செய்தி கசிந்துள்ளது. அது என்னவென்றால், நடிகை தபு AK 63 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான ’கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தபு நடித்திருந்தார். தற்போது 24 ஆண்டுகளுக்கு பின் AK 63 படத்தின் மூலம் அஜித் – தபு இணைந்து நடிக்க உள்ளார்கள் என்ற தகவல் வெளியாகி இருப்பது படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.
கூடிய விரைவில் AK 63 படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
”பாரத ரத்னா விருது கொடுத்தாலும் வாங்கமாட்டேன்” : ராமதாஸ்
Video : ரோட்டர்டாமில் ’விடுதலை’- க்கு கிடைத்த உற்சாக வரவேற்பு!