நடிகை டாப்ஸி பன்னு தன்னுடைய நீண்டநாள் காதலரை கரம் பிடித்துள்ளார். சத்தமின்றி நடைபெற்ற இந்த திருமணம் தான் பாலிவுட்டின் ஹாட் டாபிக் ஆக இருக்கிறது.
கடந்த 2௦11-ம் ஆண்டு வெளியான ‘ஆடுகளம்’ படத்தின் வழியாக தமிழில் அறிமுகமானவர் டாப்ஸி. தொடர்ந்து ‘வந்தான் வென்றான்’, ‘காஞ்சனா 2’, ‘அனபெல்லா சேதுபதி’ படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
தற்போது தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஷாரூக்கானுடன் இவர் இணைந்து நடித்த ‘டன்கி’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
Meetha Ragunath: காதலில் ‘விழுவேன்’ என நினைக்கவில்லை… வைரலாகும் ‘குட் நைட்’ நடிகையின் பதிவு!
அடுத்ததாக ‘வோ லடுக்கி ஹை கஹான்’ மற்றும் ‘கேல் கேல் மெய்ன்’ ஆகிய பாலிவுட் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தநிலையில் டாப்ஸி சத்தமின்றி தன்னுடைய நீண்டநாள் காதலரை மணம் புரிந்துள்ளார்.
டாப்ஸி பன்னு – மத்தியாஸ் போ இருவரின் திருமணம், கடந்த மார்ச் 23-ம் தேதி உதய்பூரில் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது.
இதில் இருவரின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். திருமணத்திற்கு பத்திரிகையாளர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.
Rain Update: தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளதா?
இதனால் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. முன்னதாக மார்ச் 2௦-ம் தேதியே பிரீ வெட்டிங் திருமண கொண்டாட்டங்கள் தொடங்கி விட்டதாக தெரிகிறது.
சிம்பிளாக நடைபெற்ற இந்த திருமணத்தில் டாப்ஸியுடன் இணைந்து நடித்த கனிகா திலோன், பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் நடிகர் பவைல் குலாடி உள்ளிட்டோர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.
திருமணத்தின்போது டாப்சியின் சகோதரி சாஹுன் பன்னு, பேட்மிண்டன் வீரர் சிராக் ஷெட்டி மற்றும் நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை பாவைல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
இதேபோல கனிகாவும் திருமணம் நடைபெற்ற இடத்தில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
கடந்த 2௦13-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற பேட்மிண்டன் தொடரின்போது டேனிஷ் நாட்டை சேர்ந்த பயிற்சியாளர் மத்தியாஸ் போ – டாப்சி பன்னு இருவரும் சந்தித்து கொண்டனர்.
நாளடைவில் இது காதலாக மாறியது. தற்போது இரு வீட்டினரின் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டு, இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துள்ளனர்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நாடாளுமன்றத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பு!
நெல்லை, விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு!
வேட்புமனு தாக்கல்… சேகர்பாபு – ஜெயக்குமார் இடையே வாக்குவாதம்: என்ன நடந்தது?