தன்னுடைய திருமண வீடியோ வெளியானதால், நடிகை டாப்சி பன்னு அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
நடிகை டாப்சி பன்னு- பேட்மிண்டன் பயிற்சியாளர் மத்தியாஸ் போ இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
சுமார் 1௦ வருடங்களுக்கும் மேலாக காதலித்து வந்த இருவரும் உதய்பூரில் நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் சிம்பிளாக திருமணம் செய்தனர். திருமணம் தொடர்பான புகைப்படம் வீடியோ எதுவும் வெளியாகக்கூடாது என்பதில் டாப்சி உறுதியாக இருந்தார்.
இதனால் பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் என யாருக்கும் இந்த திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. திருமண தேதி கூட வெளியில் கசியவில்லை.
இதன் காரணமாக திருமணம் முடிந்து இரண்டு நாட்கள் கழித்துத்தான் இருவரும் திருமணம் செய்துகொண்ட விவரமே தெரியவந்தது.
இந்தநிலையில் டாப்சி-மத்தியாஸ் இருவரின் திருமண வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் டாப்சி சுடிதார் போன்ற உடையில் கண்ணாடி அணிந்து கொண்டு, தோழிகள் புடைசூழ மேடைக்கு வருகிறார்.
#TaapseePannu leaked video of wedding 💒 pic.twitter.com/y9ZjwrXaTI
— Naresh Meena (@NareshM77011935) April 3, 2024
அங்கு மத்தியாஸ் போ தனியாக கண்ணாடி அணிந்து கொண்டு நிற்கிறார். இருவரும் பேசிக்கொள்கின்றனர். தொடர்ந்து மாலை மாற்றிக்கொண்டு திருமணம் செய்கின்றனர்.
உறவினர்கள், நண்பர்கள் பூக்களைத்தூவி இருவரையும் வாழ்த்த, மேடையில் இருந்து இருவரும் இறங்கி அலங்கரிக்கப்பட்ட சைக்கிளில் செல்வது போல காட்சிகள் உள்ளன. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தன்னுடைய திருமணம் தொடர்பான புகைப்படம், வீடியோ எதுவுமே வெளியாகக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த டாப்சி தற்போது திருமண வீடியோ கசிந்ததால் அப்செட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆர்.எஸ்.எஸ்.சுக்கே சவால் விட்ட அண்ணாமலை: கோவையில் நடப்பது என்ன?
ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை!
மக்களவை தேர்தல்: முதியோர்களுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது!