நடிகை சுஷ்மிதா சென் தனக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் தற்போது நலமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் சுஷ்மிதா சென். தற்போது 47 வயதாகும் இவர் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
தன்னுடைய 18வயதில் மாடலிங் துறையில் நுழைந்து ’மிஸ் யுனிவர்ஸ்’ பட்டத்தை 1994ஆம் ஆண்டு வென்றார்.
பின்னர், 1996ஆம் ஆண்டில் பாலிவுட் திரை உலகில் நுழைந்த இவர், தமிழில் நடிகர் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக ‘ரட்சகன்’ என்னும் படத்திலும் நடித்துள்ளார்.
கடைசியாக ‘டிஸ்னி ஹாட் ஸ்டார்’ ஓடிடி தளத்தில் வெளியான ஆர்யா என்கிற வெப் சீரிஸில், கதையின் நாயகியாக நடித்திருந்தார் சுஷ்மிதா சென்.
இந்நிலையில், தற்போது இவர் சமூக வலைதளத்தில் போட்டுள்ள பதிவு பாலிவுட் மற்றும் கோலிவுட் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
”உங்கள் இதயத்தை மகிழ்ச்சியாகவும் , பலமாகவும் வைத்திருங்கள். அது உங்களுக்கு மிகவும் தேவைப்படும்போது அது உங்களுடன் துணை நிற்கும் இது என் தந்தை சுபிர் சென் சொன்ன புத்திசாலித்தனமான வார்த்தைகள்.
இரண்டு நாட்களுக்கு முன் எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது… ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது… ஸ்டென்ட் போடப்பட்டது… மிக முக்கியமாக, எனக்கு பலமான இதயம் இருக்கிறது’ என்பதை எனது இருதயநோய் நிபுணர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
நிறையபேருக்கு தங்களின் சரியான நேரத்தில் உதவி மற்றும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்…மற்றொரு இடுகையில் அதைச் செய்கிறேன். எனது நலம் விரும்பிகளுக்கு நன்றி என்று குறிப்பிட்டு உள்ளார்.
மேலும் இந்த பதிவு உங்களுக்கு (எனது நலம் விரும்புபவர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு) தெரியப்படுத்துவதற்காக மட்டுமே. நல்ல செய்தி என்னவென்றால்… எல்லாம் நன்றாக இருக்கிறது. நான் மீண்டும் எனது வாழ்க்கைக்கு தயாராக இருக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்துகிறேன் நண்பர்களே!!!! என கூறி உள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
3வது டெஸ்ட்: 2வது இன்னிங்ஸிலும் ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா
அதிமுக ஒன்று சேராததே தோல்விக்கு காரணம்: எடப்பாடியை விமர்சித்த அண்ணாமலை