இந்திய சினிமாவில் படைப்பிலும், சர்வதேச அங்கீகாரம் பெறுகின்ற முயற்சிகளில் மலையாள சினிமாக்கள் முன்னணியில் தங்களை முன் நிறுத்திக் கொள்வார்கள்.
நூற்றுக்கணக்கான கோடி பட்ஜெட்டில், நட்சத்திர இயக்குநர், நடிகர்கள் நடித்த படங்கள் கூட எட்ட முடியாத, போட்டியில் களமிறங்க முடியாத சூழலில் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் மலையாள படங்கள் சர்வதேச அளவில் முக்கியமான, கௌரவம் மிக்க விருதுகளுக்கான போட்டியில் பங்கேற்பதில் தீவிரமாக இருப்பார்கள்.
சர்வதேச சினிமாவில் ஆஸ்கர் அகடமி விருதுக்கு இணையாக கருதப்படுவது கிராமி விருதுகள். 2025 பிப்ரவரி மாதம் 67வது கிராமி விருது விழா நடைபெற இருக்கிறது. இதற்காக உலகெங்கிலும் உள்ள பல்வேறு மொழிகளில் தயாரிக்கப்பட்ட படங்கள் பல்வேறு போட்டி பிரிவுகளில் கலந்து கொள்வதற்காக தங்களது படங்களை அனுப்பி வருகின்றன.
இந்த நிலையில் மலையாளத்தில் இந்த வருடம் வெளியாகி வெற்றி பெற்ற ‘மஞ்சும்மேல் பாய்ஸ்’ மற்றும் பஹத் பாசில் நடிப்பில் வெளியான ‘ஆவேசம்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் கிராமி விருதுகளுக்கான இசைப்பிரிவு போட்டிகளில் கலந்து கொள்ள அனுப்பப்பட்டுள்ளன.
இந்த இரண்டு படங்களின் வெற்றிக்கும் படத்தில் இடம்பெற்றுள்ள பாடலும், பிண்ணனி இசையும் முக்கிய பங்கு வகித்தன. இரண்டு படங்களுக்கும் இசையமைப்பாளர் சுஷின் சியாம் இசையமைத்துள்ளார்.
இரண்டு படங்களையும் கிராமி விருதுகளுக்கு அனுப்பியுள்ளது பற்றி குறிப்பிடுகிறபோது, விசுவல் மீடியாவுக்கான சிறந்த ஒலிப்பதிவு தொகுப்பு என்கிற பிரிவில் ஆவேசம் படத்தையும், சிறந்த ஒலிக்கோர்வை என்கிற பிரிவில் மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தையும் அனுப்பி வைத்துள்ளதாக கூறியுள்ளார்.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வினேஷ் போகத் பின்னடைவு… கலையும் காங்கிரஸ் கனவு!
ஜம்மு காஷ்மீர் தேர்தல்: இரண்டு தொகுதிகளிலும் ஓமர் அப்துல்லா முன்னிலை!
டாப் 10 நியூஸ் : தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல் ஹரியானா, ஜம்மு காஷ்மீர் வாக்கு எண்ணிக்கை வரை!
கிச்சன் கீர்த்தனா : பைனாப்பிள் பூந்தி
இவனெல்லாம் வச்சிக்கிட்டு என்ன பண்றது? – அப்டேட் குமாரு