சூர்யவம்சம் 2: சூப்பர் அப்டேட் கொடுத்த சுப்ரீம் ஸ்டார்!

சினிமா

சூர்யவம்சம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வருவதை நடிகர் சரத்குமார் இன்று உறுதி செய்துள்ளார்.

கடந்த 1997 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் நாள் இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில், சரத்குமார், தேவயானி, ராதிகா சரத்குமார், பிரியா ராமன், ஆர்.சுந்தர்ராஜன், மணிவண்ணன், நிழல்கள் ரவி, ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சூர்யவம்சம்.

இந்த படம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்த படம் தற்போதும் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் ப்ளே லிஸ்ட்டில் இடம்பெற்று இருக்கிறது.

சூர்யவம்சம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது மட்டும் அல்லாமல் இந்த படத்தில் இடம்பெற்ற படல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்போதும் கூட மீம்ஸ் டெம்ப்ளேட்டுகளாக இந்த படத்தின் காட்சிகள் அதிகம் பயன்படுத்தப்படுவதை நாம் சமூக வலைதளபக்கங்களில் பார்த்திருப்போம்.

இதனிடையே, சூர்யவம்சம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது உருவாகும் என்று அவ்வப்போது ரசிகர்கள் கேட்பதுண்டு.

இச்சூழலில், படம் வெளியாகி 26 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் நடிகர் சரத்குமார் சூர்யவம்சம் திரைப்படம் குறித்த அப்டேட் ஒன்றை இன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், “கலைத்துறை பயணத்தில், காலங்கள் கடந்தும், தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்தும், இன்றளவும் அனைத்து தரப்பு ரசிகர்களின் சிந்தையிலும் நீங்காமல் நிறைந்திருந்து கொண்டாடக்கூடிய சிறப்புவாய்ந்த குடும்பத் திரைப்படம் சூர்யவம்சம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள்.

கதாபாத்திரங்கள், வசனங்கள், பாடல்கள் என ஒட்டுமொத்த திரைப்படத்தையும் ரசித்து, மாபெரும் வெற்றியளித்து, ஆதரவளித்த அன்பர்களுக்கு நன்றி. விரைவில் சூர்யவம்சம் – 2” என்று கூறியுள்ளார்.

தற்போது சூர்யவம்சம் 2 எப்போது திரைக்கு வரும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


மு.வா.ஜெகதீஸ் குமார்

விஜய் யாருனே எனக்கு தெரியாது: துக்ளக் குருமூர்த்தி

தந்தை குறித்து சிவகார்த்திகேயனின் நெகிழ்ச்சி பதிவு !

+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *