ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஈ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தெலுங்கு நடிகரான நானி. ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை தயாரித்த டிவிவி என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்துள்ள “சூர்யாவின் சனிக்கிழமை” படத்தில் நானி, எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன், முரளி ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ள இந்த படம் தெலுங்கில் ‘சரிபோதா சனிவாரம்’ என பெயரிடப்பட்டுள்ளது. சுமார் 90 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியானது.
கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள இந்தப் படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 24.11 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : ஃபார்முலா 4 கார் ரேஸ் முதல் GOAT 4வது சிங்கிள் ரிலீஸ் வரை!
கிச்சன் கீர்த்தனா : ராஜ்கிரா பர்ஃபி
பாமகவை கொஞ்சம் கொஞ்சமாக கலைக்கும் ராமதாஸ்
தொழிலதிபரின் பாலியல் தொல்லை… சிறையில் 48 நாள்கள் கிடந்த நடிகை… காலத்தின் கொடுமை!