கங்குவா திரைப்படத்தின் முதல் வசூல் குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் நேற்று (நவம்பர் 14) திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தனது ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.
உலகம் முழுவதும் சுமார் 11 ஆயிரம் திரைகளில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
இந்த படத்தில் இரைச்சல், அதீத சத்தம் எரிச்சலூட்டுவதாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் உலகம் முழுவதும் கங்குவா முதல் நாள் வசூலாக 48.50 கோடி ரூபாய் வசூலித்ததாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போது வசூல் தொகையை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இப்படம் முதல் நாளில் உலக அளவில் ரூ.58.62 கோடியை வசூலித்துள்ளதாக ஸ்டூடியோ க்ரீன் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தி கோட் படம் முதல் நாள் 126 கோடியை வசூலித்தது. ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் முதல் நாள் சுமார் 60 கோடி வசூலித்தது.
இந்த நிலையில் ரூ.58.62 கோடி வசூலித்து இந்த ஆண்டு வெளியான படங்களில் முதல் நாள் அதிகம் வசூல் செய்த படங்கள் வரிசையில் கங்குவா மூன்றாவது இடத்தில் உள்ளது.
அமரன் திரைப்படம் 42.30 கோடி ரூபாய் முதல் நாள் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
தமிழர்கள் பகுதியிலும் வென்ற அதிபர் A.K.D… இனி இலங்கை எப்படி இருக்கும்? – எச்சரிக்கும் வைகோ
“எங்கள் நாடு” : கனடாவை சொந்தம் கொண்டாடும் காலிஸ்தான்