பாலா படத்திலிருந்து விலகிய சூர்யா: ஏன்?

சினிமா

சூர்யாவுடன் இணைந்து வணங்கான் என்ற புதிய படத்தை இயக்குனர் பாலா இயக்கி வந்தார். நந்தா, பிதாமகன் படத்தை தொடர்ந்து இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்தது.

இப்படத்தின் படப்பிடிப்பும் கடந்த ஏப்ரல் மாத துவக்கத்தில் கன்னியாகுமரியில் சில நாட்கள் நடைபெற்றது. இதையடுத்து சில பிரச்சினைகள் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. சூர்யாவும் தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்கச் சென்றார்.

இதனிடையே சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இப்படம் கைவிடப்படுவதாக அவ்வப்போது தகவல் வெளியாகி வந்தது.

இந்த நிலையில் இன்று (டிசம்பர் 4) வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகி இருப்பதாக இயக்குனர் பாலா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில், ”என் தம்பி சூர்யாவுடன் இணைந்து வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களால் இந்த கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.

என் மீதும் இந்த கதையின் மீதும் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்ம சங்கடம் கூட நேர்ந்து விடக் கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது.

எனவே வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒரு மனதாக முடிவெடுத்து இருக்கிறோம். அதில் அவருக்கு வருத்தம் தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது.

நந்தாவில் நான் பார்த்த சூர்யா பிதாமகனில் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம்.

மற்றபடி வணங்கான் படப்பணிகள் தொடரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரியா

இரட்டை சகோதரிகளுடன் திருமணம்: மாப்பிள்ளை மீது பாய்ந்த வழக்கு!

காதல், திருமண உறவு வழக்கு : டிஜிபி புது உத்தரவு!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.