கையில் தீப்பந்தம்: சூர்யாவின் மாஸ் லுக்!

சினிமா

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கும் படம் கங்குவா.

இந்த படத்தில் நடிகர் சூர்யா இரு வேறு வித்தியாசமான தோற்றங்களில் நடித்திருக்கிறார். ஒரு வரலாற்று பின்னணியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள கங்குவா படத்தின் போஸ்டர்களும் Glimpse வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் கொடைக்கானல், கோவா, தாய்லாந்து உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. அடர்ந்த காடுகளிலும், மலைகளிலும் பிரம்மாண்டமான செட்டுகள் போடப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

தற்போது கங்குவா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை ஈ வி பி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. மற்றொரு புறம் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இன்று (நவம்பர் 12) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கங்குவா படத்தின் புது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கையில் தீப்பந்தத்தை ஏந்தியவாறு சூர்யா மாஸாக போஸ் கொடுக்கும் ஸ்டில் அந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.

2024 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 11 ஆம் தேதி கங்குவா படம் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கங்குவா படத்தின் மீது ரசிகர்கள் வைத்துள்ள எதிர்பார்ப்பை இயக்குனர் சிறுத்தை சிவாவும் நடிகர் சூர்யாவும் பூர்த்தி செய்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து: 40 பேர் கதி என்ன?

INDvsNED: கடைசி போட்டி… புதிய சாதனை படைக்க காத்திருக்கும் மூன்று இந்திய வீரர்கள்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *