நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் மிக பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கான இறுதி கட்ட படபிடிப்புகள் தற்போது தாய்லாந்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தை முடித்தபின் நடிகர் சூர்யா இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் தனது 43வது படத்தில் நடிக்க இருக்கிறார்.
ஏற்கனவே இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வெளியான சூரரைப் போற்று படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்ததால், சுதா – சூர்யா கூட்டணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சூர்யா 43 படத்திற்காக நடிகர் சூர்யா நீண்ட காலங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு கல்லூரி மாணவராக நடிக்க இருக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்காக அதிக அளவில் உடல் எடையை குறைக்க உள்ளாராம். சூர்யா 43 படத்தில் நடிகர் சூர்யாவுடன் நடிகர் துல்கர் சல்மான் மற்றும் நடிகை நஸ்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் சூர்யா 43 படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கயுள்ளார். இந்த படம் ஜி.வி.பிரகாஷுக்கு இசையமைப்பாளராக 100வது படம்.
கங்குவா, சூர்யா 43, வாடிவாசல் ஹிந்தியில் கர்ணா என நடிகர் சூர்யாவின் லைன் அப்பை கேட்டாலே வெறித்தனமாக உள்ளது என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் சூர்யாவை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
இந்தியா vs பாகிஸ்தான்: மழை பாதிப்பு… வானிலை மையம் சொல்வது என்ன?
INDvsPAK: தோல்வியையே சந்திக்காத இந்தியா… 8வது முறை பாகிஸ்தானை வீழ்த்துமா?