லியோ படத்தின் படக்குழுவினர்கள் குறித்த வீடியோவை தயாரிப்பு நிறுவனம் இன்று (மார்ச் 23 ) வெளியிட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘லியோ’ படத்தில் நடிகர் விஜய் தற்போது நடித்து வருகிறார். இதில் 14 வருடங்களுக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா இணைந்திருக்கிறார்.
இவர்களுடன் நடிகர்கள் கெளதம் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜூன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கி தற்போது நடந்து முடிந்து இருக்கிறது. ஜீரோ டிகிரி செல்சியஸ் கடும் குளிரிலும் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெற படக்குழு கடுமையாக உழைத்து இருக்கிறது.
இந்நிலையில், காஷ்மீரில் நடைபெற்ற படப்பிடிப்பை நல்ல படியாக முடிக்க உறுதுணையாக இருந்த படக்குழுவினருக்கும் பாதுகாப்பிற்காக துணை நின்ற ராணுவத்திற்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழு வீடியோ ஒன்றை இன்று (மார்ச் 23 ) வெளியிட்டு இருக்கிறது.
அந்த வீடியோவில் படக்குழுவினருக்கு சமையல் செய்யும் பணிப்பெண் தொடங்கி.. லைட்மேன் வரை அனைவரும் படப்பிடிப்பில் தாங்கள் பட்ட கஷ்டங்களை பேசியிருக்கின்றனர். அத்துடன் இறுதியாக ராணுவ அதிகாரிகளுக்கு விஜய் நன்றி தெரிவிக்கும் காட்சியும் அதில் இடம் பெற்று இருக்கிறது.
இந்த வீடியோ காட்சிகளை தற்போது சமூகவலைதளங்களில் விஜய் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்