நடிகர் வடிவேலு தன்னுடைய பிறந்தநாளை இன்று (செப்டம்பர் 12) கொண்டாடுகிறார்.
இந்நிலையில், அவரது நடிப்பில் உருவாகிவரும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் புதிய போஸ்டர் இன்று (செப்டம்பர் 12 ) வெளியாகியுள்ளது.
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தை தயாரிக்கும் லைக்கா புரொடக்ஷன்ஸ் இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளது.
தலைநகரம் படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரமான நாய் சேகர் பட கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய படம் ஒன்று உருவாகிவருகிறது.
நாய் சேகர் என்ற பெயரில் முன்னரே சதீஷ் படம் அறிவிக்கப்பட்டதால் இந்தப் படத்துக்கு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்று பெயர் மாற்றப்பட்டது. தலைநகரம் படத்தை இயக்கிய சுராஜ் இந்தப் படத்தை இயக்கிவருகிறார்.
இந்தப் படத்தில் பிக்பாஸ் மூலம் பிரபலமான ஷிவானி நாராயணன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். லைக்கா புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தற்போது வடிவேல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகிவரும் மாமன்னன் படத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
வாம்மா நீ தான் என் தங்கச்சி…வடிவேலுவின் செயலால் நெகிழ்ந்த ரசிகர்கள்!