Suriya's Kanguva Trailer Released

‘கங்குவா’ டிரெய்லர்… ரசிகர்கள் ரியாக்‌ஷன் இதோ!

சினிமா

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் மற்றும் பலர் நடித்துள்ள படம் கங்குவா. ஸ்டுடியோ கீரின் கே. ஏ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். கடந்தகால வரலாற்றுடன் கூடிய பேண்டஸி படமான கங்குவா இரண்டு பாகங்களாக வெளியிடப்பட உள்ளது.

இதன் முதல் பாகம் அக்டோபர் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது. சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் கங்குவா,  தமிழ் உட்பட பத்து மொழிகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்த நிலையில், படத்தின் இயக்குநர் சிறுத்தை சிவா பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா படத்தின் டிரைலர் நேற்று (ஆகஸ்ட் 12) வெளியிடப்பட்டு உள்ளது.

2.37 நிமிடங்கள் திரையில் ஓடக்கூடிய டிரைலர் எப்படி இருக்கிறது, என்ன உணர்த்துகிறது?

பெருமாச்சி மண்ணை காக்கும் பழங்குடியின மன்னராக அல்லது தளபதியாக சூர்யா கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சூர்யாவுக்கு வில்லனாக பாபி தியோல் இருக்க கூடும். இருவருக்கும் இடையிலான சண்டை காட்சி தான் பிரதானமாக இடம்பிடித்துள்ளது.

அவர்களின் தோற்றமும், உடை வடிமைப்பும் வித்தியாசமாக உள்ளது. சண்டை காட்சிகள், கிராபிக்ஸ் இரண்டும் தமிழ் சினிமாவில் இதுவரை வந்த படங்களில் இல்லாத ஒன்றாக இருக்கிறது. மண்ணை காக்கும் மாவீரனாக சூர்யா கதாபாத்திரம் இருக்கும் என்பதை அவர் பேசும் ‘ அறுபட்டு என் சிரம் மண்ணுருண்டாலும் உருளும், முன் நெற்றியும் முழங்காலும் மண் தொடா, மண்டியிடா’ வசனம் உறுதிப்படுத்துகிறது.

கடந்த காலம், நிகழ்காலம் இரண்டும் கலந்த பேண்டசி படம் என்பதற்கான எந்த வொரு காட்சியும் இந்த டிரைலரில் காண்பிக்கப்படவில்லை.

Suriya's Kanguva Trailer Released

சூர்யா தம்பி கார்த்தி இறுதிக்கட்டத்தில் கங்குவா படத்தில் இணைந்தார் என கூறப்பட்டது. அவர் சம்பந்தமான காட்சிகள் பிரதானமாக இடம்பெறவில்லை என்றாலும்  கார்த்தி இடம் பெற்றுள்ள காட்சி ஒரு பிரேமில் கண் சிமிட்டும் நேரத்தில் கடந்து போகிறது.

கார்த்தி குதிரையில் வரும் அந்தகாட்சியை டிரைலரில் பிளர் செய்துள்ளனர். டிரைலர் வெளியான 120 நிமிடங்களில் 20 லட்சம் பார்வைகளை கடந்தது படம் பற்றிய எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடம் எதிர்பார்ப்பு உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது.

சமூக வலைத்தளங்களில் கங்குவா டிரைலர் பற்றிய கருத்து என்ன?

“தம்பிக்கு ஆயிரத்தில் ஒருவன். அண்ணனுக்கு கங்குவா. ஆயிரத்தில் ஒருவன் கமர்சியலா சரியா போகலைன்னாலும், தரமான கன்டென்ட் உள்ள படம். கார்த்தி, செல்வராகவனோட உழைப்பு ஒவ்வொரு பிரேமிலும் தெரியும். கங்குவா Trailer ஐ வச்சு ஒன்னும் சொல்ல முடியாது ”

“படத்த சிறுத்தை சிவா தானே எடுத்தாப்ல எனக்கென்னமோ ராஜமௌலி படத்தோட ட்ரைலர் மாதிரி பீல் ஆகுது மெரட்டி விட்ருக்காப்ல சிறுத்தை சிவா”

” மக்களை எதிரியான பாபி தியோலிடம் இருந்து காப்பாற்ற போராடும் ஒரு மக்களின் தலைவனாக சூர்யா நடித்திருக்கிறார் ”

Suriya's Kanguva Trailer Released

” சூர்யாவின்வெறித்தனமான நடிப்பை பார்க்கும்போதே படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை அதிகரிக்கிறது கங்குவா தமிழ்நாட்டின் முதல் 1000 கோடி வசூலிக்கும் படமாக இருக்கும்”

” கங்குவானு பெயர் வச்சதுக்கு பதிலா கத்தவானு வச்சிருக்கலாம் டிரைலர்ல சூர்யா அந்த கத்து கத்துறாப்பல ”

” விஜய்க்கு புலி, அஜித் குமாருக்கு அசோகா, சூரியாவுக்கு கங்குவா”

” கங்குவா படத்தில் கதாபாத்திரங்கள் தோற்றமும், உடைகளும் பாகுபலி படத்தில் இடம்பெற்றுள்ள காலகேயர்கள் கூட்டத்தின் தலைவனை நினைவூட்டுகிறது” என விமர்சனங்கள், கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

திரைப்படங்கள் பற்றி பார்வையாளர்களின் கருத்துக்களை சம்பந்தபட்டவர்கள் அறிந்து கொள்ள தொழில்நுட்ப வளர்ச்சி வழங்கியுள்ள அருங்கொடை சமூக வலைதளம் என்றே கருத வேண்டியுள்ளது.

ஒரு படம் வெளியான பின்பு எதிரான விமர்சனங்களை நீர்த்து போக படத்தில் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது. ஆனால், டிரைலர் பற்றி வருகின்ற கருத்துகளை வைத்து ரசிகன், பார்வையாளன் எதிர்பார்ப்பை புரிந்து கொண்டு அதற்கேற்ப மாற்றங்களையும் செய்ய முடியும்.

கங்குவா படம் சம்பந்தமான கருத்து விமர்சனங்களில் சூர்யா ஆதரவு ஆர்மி, எதிரான ஆர்மி இரண்டும் பங்கேற்று இருப்பதை உணர முடிகிறது.

இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சிவகாசியில் முதன்முறையாக பட்டாசு வர்த்தகக் கண்காட்சி… எப்போது தெரியுமா?

ஹெல்த் டிப்ஸ்: எடைக்குறைப்பு உதவுமா எலுமிச்சை சாறும் தேனும் கலந்த வெந்நீர்?

அமெரிக்க அரசியல் குழப்பமும் அதன் சமூகப் பொருளாதாரமும்! பகுதி 1

டாப் 10 நியூஸ்: தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதல் கோட் டிரெய்லர் அப்டேட் வரை!Suriya's Kanguva Trailer Released

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *