நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் கங்குவா. இந்த படத்தில் கதாநாயகியாக திஷா பட்டாணி நடித்துள்ளார். வில்லனாக பாபி தியோல் நடித்திருக்கிறார்.
ஃபேண்டஸி சரித்திர படமாக உருவாகும் கங்குவா தமிழ், தெலுங்கு உட்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யா இரண்டு வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் சூர்யாவின் மார்டன் லுக் சமூக வலைதளங்களில் வைரலானது. அதனை தொடர்ந்து பாபி தியோலின் உதிரன் லுக்கும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
https://twitter.com/StudioGreen2/status/1752683171026788781
இந்நிலையில் தற்போது கங்குவா படப்பிடிப்பு நிறைவடைந்ததை முன்னிட்டு அந்த பட கெட்டப்பில் நடிகர் சூர்யாவின் கேசுவல் லுக் புகைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
2024 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு கங்குவா படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
ED கஸ்டடி: ஹேமந்த் சோரன் ராஜினாமா… புதிய முதல்வர் யார்?
டிஜிட்டல் திண்ணை: வேலுமணியின் மெகா டீல்… தனிமைப்படுத்தப்படும் அண்ணாமலை?