சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கங்குவா’ படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த, புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி, ஜெகபதி பாபு, பாபி சிம்ஹா மற்றும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கங்குவா’. பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தினை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் விஎப்எக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோவை மகனுடன் சேர்ந்து பார்த்த, பாபி தியோல் காட்சிகள் நன்றாக வந்திருப்பதாக பாராட்டி இருந்தார்.
நாயகன் சூர்யாவும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளின் போது காட்சிகளை பார்த்து படக்குழுவினரை பாராட்டியதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஓடிடி உரிமையினை, அமேசான் பிரைம் நிறுவனம் மிகப்பெரும் தொகைக்கு கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் படத்தின் டீசர் குறித்த புதிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி டீசர் தயாராகி விட்டதாம். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, டீசரினை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம்.
அதோடு விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தங்கலான்’ படத்தின் இடைவேளையில் ‘கங்குவா’ படத்தின் டீசரை இணைத்திடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. 1௦ மொழிகளில் வெளியாகவிருக்கும் ‘கங்குவா’ ஐமேக்ஸ் மற்றும் 3டி பார்மேட்டில் ரிலீஸ் செய்யப்படுகிறது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
’ED முன்பு 12ஆம் தேதிக்கு பிறகு ஆஜராக தயார்.. ஆனால்’ : கெஜ்ரிவால்
IPL 2024: ஹைதராபாத் அணியின் ‘புதிய’ கேப்டன் இவர்தான்!