‘ஜெய்பீம்’ படத்திற்குப் பிறகு வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்திற்குத் தான் கால்ஷீட் கொடுத்திருந்தார் சூர்யா.
’வாடிவாசல்’ தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வெற்றிமாறனுக்கும் சூர்யாவுக்கும் பெரும் தொகையை அட்வான்ஸ் கொடுத்திருந்தார்.
டைரக்டர் வெற்றிமாறனோ கதையின் நாயகர்களாக சூரியும் விஜய்சேதுபதியும் நடிக்கும் ‘விடுதலை’ படத்தை முடித்துவிட்டு ‘வாடிவாசலை’ ஆரம்பிக்கலாம் என சூர்யாவிடம் சொல்லியிருந்தார்.
இந்த கேப்பில் சன் பிக்சர்ஸ் பேனரில் பாண்டி ராஜ் டைரக்ஷனில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து முடித்தார் சூர்யா.
அப்போதும் ‘விடுதலை’ படத்தின் ஷூட்டிங்கை வெற்றிமாறன் முடிக்கவில்லை. இருந்தாலும் சூர்யாவை ஏமாற்றக்கூடாது என்பதற்காக, அலங்காநல்லூரிலிருந்து ஜல்லிக்கட்டுக் காளையை வரவைத்து சென்னை பனையூரில் ‘வாடிவாசல்’ படத்தின் டெஸ்ட் ஷூட்டை நடத்தினார் வெற்றிமாறன்.
இதனால் ஹேப்பியான சூர்யா, வாடிவாசலுக்குத் தயாரானார். ஆனால் வெற்றிமாறனோ ‘விடுதலை’யின் கடைசி ஷெட்யூலை முடித்துவிட்டுக் கண்டிப்பாக வந்துவிடுவேன் எனச் சொல்லியிருந்ததால் காத்திருந்தார் சூர்யா.
இந்த கேப்பில் பாலாவின் ‘வணங்கான்’ படத்திற்கு கால்ஷீட் கொடுத்து இரண்டு ஷெட்யூல்ட் ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது.
வெற்றிமாறனோ, இப்போது கொடைக்கானல் சிறுமலை ஏரியாவில் ‘விடுதலை’ ஷூட்டிங்கை நடத்திக் கொண்டிருக்கிறார்.
அடுத்த மாதம் தான் படத்தின் மொத்த ஷூட்டிங்கும் முடிந்து, அதன் பின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஆரம்பமாகும்.
டிசம்பர் அல்லது ஜனவரியில் தான் ‘விடுதலை’ரிலீஸ் ஆகும். இதையெல்லாம் கணக்குப் போட்டுப் பார்த்த சூர்யா, ’அண்ணாத்த’ சிவாவுக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டார்.
ஷூட்டிங்கும் ஆரம்பமாகிவிட்டது. இதற்கிடையே ‘விடுதலை’யை எடுத்தவரைக்கும் போட்டுப் பார்த்ததில் நான்கு மணி நேரத்திற்கு மேல் ஓடுவதால் இரண்டு பாகமாக ரிலீஸ் பண்ணலாமா என்ற யோசனையில் இருக்கிறாராம் இயக்குநர் வெற்றிமாறன்.
படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட்குமாரோ என்ன செய்வதென்ற தவிப்பில் இருக்கிறாராம்.