தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா மீண்டும் ஒரு சயின்ஸ் பிக்ஷன் படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ’24’ படத்தில் 3 வித்தியாசமான வேடங்களில் நடித்திருந்தார் சூர்யா. அவரின் முதல் சயின்ஸ் பிக்ஷன் படமான இதை விக்ரம் குமார் இயக்கி இருந்தார் .’டைம் டிராவலை’ மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா, நித்யா மேனன் இருவரும் நடித்து இருந்தனர்.
’24’ படத்தில் நடித்ததற்காக சூர்யாவுக்கு 64-வது ஃபிலிம்பேரில் சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்தது. இந்த நிலையில் மீண்டுமொரு சயின்ஸ் பிக்ஷன் படத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறாராம். இப்படத்தை ‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ படங்களின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கவுள்ளாராம்.
தற்போது ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், படத்தை டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரும் பொருட்செலவில் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் அடிபடுகின்றன. அதோடு இப்படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைக்க கேட்டிருப்பதாகவும் தெரிகிறது.
சூர்யாவின் 44-வது படமாக இப்படம் உருவாகவிருக்கிறது. விரைவில் படம் குறித்த மேலதிக தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா-ரவிக்குமார் கூட்டணி உறுதியானால் சூர்யா ரசிகர்களுக்கு இப்படம் மிகப்பெரிய விருந்தாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
GOAT: தளபதி விஜய்க்கு ‘வில்லன்’ இவர்தான்?
சிவகார்த்திகேயனால் கைவிடப்பட்ட படம்?