அமீர் இயக்குனராக காரணம் நடிகர் சூர்யா தான் என்றும் அவர் பொய் கணக்கு நிறைய சொல்வார் என்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அளித்த பேட்டி தமிழ் திரையுலக வட்டாரங்களில் மிகுந்த அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது. Ameer’s directorial debut
இந்த நிலையில் அமீர் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மை கிடையாது என மௌனம் பேசியதே தயாரிப்பாளர் கணேஷ் ரகு நம்முடைய மின்னம்பலம் யூடியுப் சேனலுக்கு Exclusive பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.
அமீரை பர்ஸ்ட் எப்போ சந்திச்சீங்க? அவர பத்தி உங்களோட கருத்து என்ன?
நந்தா படத்துல பாலா சார் கிட்ட அசோஸியேட் இயக்குநரா அமீர் வேலை பாத்துட்டு இருந்தாரு. அப்போ அவரோட கடின உழைப்பு, நுண்ணறிவு எல்லாம் ரொம்ப நாளா ஷூட்டிங்ல பாத்துட்டு இருந்தேன். பாலா சாருக்கு ஒரு உறுதுணையாகவும் வலதுகரமாகவும் அமீர் செயல்பட்டுட்டு இருந்தாரு. கடவுள் நம்பிக்கை அவருக்கு அதிகம். அவரோட கடின உழைப்பை பார்த்துட்டு தான் நான் அவருக்கு மௌனம் பேசியதே படம் இயக்குற வாய்ப்பை கொடுத்தேன். அவரா என்கிட்டே வாய்ப்பு கேட்டு வரல.
சூர்யா தான் உங்ககிட்ட பேசி மௌனம் பேசியதே வாய்ப்பை அமீருக்கு வாங்கி கொடுத்தாரா?
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீடியோ பார்த்தேன். அவர் சொன்னது முற்றிலும் தவறு. மௌனம் பேசியதே படம் எல்லாம் முடிஞ்சு பிரிவியூ ஷோ தான் ஞானவேல் ராஜாவுக்கு போட்டு காண்பித்தேன். அப்படி இருக்கும்போது அவர் ஏன் அமீருக்கு எதிரா இதுபோல பேட்டி கொடுத்திருக்கிறார்னு தெரியல.
அமீருக்கும் எனக்கும் நடுவுல பிரச்சினை ஒண்ணுமே இல்லை. இயக்குனர் சில நேரங்கள்ல கடுமையா நடந்துக்குறதுக்கு காரணம் படம் நல்லா வரணும்னு தான். எங்க மூவருக்குள்ள (அமீர், சூர்யா) நல்ல புரிதல் இருந்தது. எங்களுக்குள்ள கருத்து வேறுபாடு கிடையாது. சூர்யாவை இளைஞர்களிடம் கொண்டு சேர்த்த படம் மௌனம் பேசியதே தான். படம் 100 நாட்களை கடந்து ஓடியது.
ஒரு இயக்குநரா ஷூட்டிங் ஸ்பாட்ல அமீர் கடுமையா நடந்துக்குவாரா?
கண்டிப்பா நடந்துக்குவார். பருத்திவீரன் பட ஷூட்டிங்ல இயக்குனர் அமீர் சிந்திய வேர்வைக்கான பலனை இப்போ அனுபவிப்பது கார்த்தி தான். பருத்திவீரன் வெற்றியால இப்போ 25 படங்கள் கார்த்தி நடித்து விட்டார். அதுபோல மௌனம் பேசியதே படம் நன்றாக வர வேண்டும் என்று ஷூட்டிங்கின் போது மிகவும் மெனக்கெட்டார்.
படம் எடுக்கும்போது தயாரிப்பாளர்-இயக்குனர் இடையே கருத்து மோதல்கள் வருவது சகஜம் தான். ஆனால் படம் நன்றாக வர வேண்டும் என்பதற்காக தான் அமீர் இதையெல்லாம் செய்றாரு. அதை நானும் புரிஞ்சுக்கிட்டேன். படம் ஷூட்டிங் நடந்தப்போ உண்மையை சொல்லி என்கிட்டே திட்டு வாங்கி இருக்காரு. கமிஷன் வாங்குவது. பொய் கணக்கு கொடுப்பது இதெல்லாம் அமீர் செய்ததில்லை.
அமீருக்கு இயக்குனரா வாய்ப்பு வாங்கி கொடுத்தது சூர்யா தான்னு ஞானவேல் ராஜா சொன்னது பொய்யா?
முற்றிலும் பொய். இதை சூர்யா சாரே ஒத்துக்க மாட்டாரு. கற்பனையாக ஞானவேல் ராஜா நிறைய விஷயங்களை சொல்றாரு, அது எல்லாமே தவறு.
அமீருக்கு இரண்டாவது பட வாய்ப்பு யாரும் கொடுக்கல? அவர் சொந்த படம் எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டாருன்னு சொன்னதை எப்படி பாக்குறீங்க?
மௌனம் பேசியதே காதல் படம். பாடல்கள் நன்றாக இருந்தது. அந்த சமயத்தில் ஆக்சன் படங்களுக்கு மக்களிடம் நிறைய வரவேற்பு இருந்தது. அதனால எதுவும் அமீருக்கு இப்படி நடந்ததான்னு தெரியல.
பருத்திவீரன் படத்தை அமீர் சொன்ன பட்ஜெட்ல எடுத்து தரலன்னு ஞானவேல் சொல்லி இருக்காரு? இந்த குற்றச்சாட்டை எப்படி பாக்குறீங்க?
பட ரிலீஸ்க்கு முன்னாடி தயாரிப்பாளர்-இயக்குனர் மோதல் வர்றது சகஜம் தான். ஆனா படம் வெளியாகி வெற்றிகரமா ஓடி 27 வயசுல கார்த்தி ஒரு ஹீரோவா உருவாகிட்டாரு. எத்தனையோ இயக்குநர்கள் தங்கள் சொந்த மகனையே ஒரு ஹீரோவாக உருவாக்க முடியாமல் தவிக்கின்றனர். Ameer’s directorial debut
அப்படி பார்த்தால் இன்று 25 படங்கள் வரை கார்த்தி நடித்து விட்டார். எனவே அமீருக்கான நன்றிக்கடன் இருக்க வேண்டும். தனிப்பட்ட முறையில காழ்ப்புணர்ச்சி அமீருக்கு கிடையாது. எங்க ரெண்டு பேருக்குள்ள வராத சண்டையே கிடையாது. ஆனாலும் 23 வருடங்களாக நாங்கள் நல்ல புரிதலுடன் தொடர்பில் இருக்கிறோம். இத்தனை படங்களுக்கு பின்னும் அமீர் ஒரே மாதிரியாக தான் இருக்கிறார்.
இதுபோல அமீர் குறித்த மேலும் பல கேள்விகள், பருத்திவீரன் சர்ச்சை ஆகியவை குறித்து தயாரிப்பாளர் கணேஷ் ரகு சுவாரஸ்யமான பதில்களை அளித்திருக்கிறார். அவரின் முழுமையான பேட்டியை காண கீழேயுள்ள வீடியோவை பார்க்கவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நேர்காணல்: பெலிக்ஸ்
தொகுப்பு: மஞ்சுளா
நான் தலைமறைவாகவில்லை: மன்சூர் அலிகான் மீண்டும் முன் ஜாமீன் மனு தாக்கல்!
டி-20 கிரிக்கெட்: முடிவுக்கு வருகிறதா விராட்-ரோஹித் பயணம்?