நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் கங்குவா. இந்த படத்தில் நடிகர் சூர்யா இரு வேறு வித்தியாசமான தோற்றங்களில் நடித்திருக்கிறார்.
ஒரு வரலாற்று பின்னணியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள கங்குவா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் Glimpse வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் கொடைக்கானல், கோவா, தாய்லாந்து, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. அடர்ந்த காடுகளிலும், மலைகளிலும் பிரம்மாண்டமான செட்டுகள் போடப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று (ஜனவரி 16) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கங்குவா படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த போஸ்டரில் சூர்யா, கையில் வாளுடன் ராஜா காலகட்ட கெட்டப் மற்றும் ஃபேஷனான ஹேர் ஸ்டைல் உடன் மார்டன் கெட்டப் என இரண்டு கெட்டப்புகளில் உள்ள புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது. அப்படியென்றால் படத்தில் நிச்சயம் பிளாஷ்பேக் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 11 ஆம் தேதி கங்குவா படம் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
திருவள்ளுவர் தினம் : மீண்டும் சர்ச்சையை எழுப்பிய ஆளுநர், அண்ணாமலை