10 மொழிகளில் சூர்யா படம்!

சினிமா

இயக்குனர் சிவா இயக்கத்தில் யுவி கிரியேசன்ஸ் நிறுவனமும், ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்து வரும் ‘சூர்யா 42’ படத்தின் மோஷன் போஸ்டர் இன்று (செப்டம்பர் 9 ) வெளியானது.

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். சூர்யா மற்றும் இயக்குனர் சிவா இருவரும் இணைந்து பணியாற்றும் முதல் படம் இது என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார்.

இப்படத்தின் மூலம் அவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இவர் இசையில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த புஷ்பா திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

Suriya in a menacing look

சூர்யா 42 படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தில் முதற்கட்ட படப்பிடிப்பை கோவாவில் நடத்தி வருகின்றனர்.

இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட படமாக இது தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. வெற்றி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

இந்நிலையில், சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

அதில் இப்படம் 3டி தொழில் நுட்பத்தில் 10 மொழிகளில் வெளியிட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

சூர்யா ‘42’ அப்டேட்: டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்!

+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *