இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள படம் கங்குவா. புராணக் கால கதைக்களத்தில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் Glimpse வீடியோவில் வித்தியாசமான கெட்டப்பில் தோன்றி மிரட்டியிருப்பார் நடிகர் சூர்யா.
குழந்தைகளின் படிப்பிற்காக மும்பையிலேயே இருக்கும் சூர்யாவிற்கு தற்போது பாலிவுட்டில் ஓர் பட வாய்ப்பு வந்துள்ளது. Rang De Basanti, Delhi 6, Bhaag Milkha Bhaag போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் ஓம்பிரகாஷ் மெஹ்ராவின் இயக்கத்தில் மகாபாரத கதையை அடிப்படையாக கொண்டு உருவாக உள்ள கர்ணா படத்தில் கர்ணன் வேடத்தில் நடிக்க பல ஹிந்தி ஹீரோக்கள் போட்டி போட்டுக் கொண்டிருந்தனர்.
ஆனால் தற்போது கர்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க சூர்யாவிற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பிரபல எழுத்தாளர் ஆனந்த் நீலகண்டன் கர்ணா படத்திற்கு கதை எழுதியிருக்கிறார். இந்த படத்தில் நடிக்க சூர்யா ஒப்புக்கொண்டுவிட்டார் என கூறப்படுகிறது.
500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக இந்த படம் தயாராகிறது. பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்திற்கான லொகேஷன் தேடல் நடந்துக் கொண்டிருக்கிறது. 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்ன எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்து வெற்றிமாறனின் வாடிவாசல், சுதா கொங்குராவுடன் ஒரு படம் என இரு படங்களை முடித்த பிறகு தான் கர்ணா படத்தில் சூர்யா நடிப்பார் என்று கூறப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சமூக ஊடகங்கள் கண்காணிப்பு: ஆட்சியர், போலீசாருக்கு முதல்வர் அறிவுரை!
சென்னை – தாம்பரம் ரயில் சேவை ரத்து: எப்போது?