18 வருடங்களுக்கு பிறகு… ஜோடி சேரும் சூர்யா-ஜோதிகா… இயக்குனர் யார் தெரியுமா…?!

Published On:

| By Manjula

தமிழ் சினிமாவில் பலருக்கும் பேவரைட் ஆன ரியல் ஜோடி சூர்யாவும், ஜோதிகாவும் தான். இருவரும் தங்கள் கேரியரில் சிறந்து விளங்கிய போது திருமணம் செய்து கொண்டனர்.

இல்லற வாழ்க்கையில் மட்டுமல்லாது, இருவரும் சினிமா உலகிலும் சாதித்து வருகின்றனர். இவர்களுக்கு தியா, தேவ் என்று இரு குழந்தைகள் இருக்கின்றனர்.

திருமணத்திற்கு பின்பு சினிமாவில் இருந்து ஓய்வு எடுத்த ஜோதிகா சில ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் நடிக்க வந்தார். தற்பொழுது இருவரும் பிசியாக வெவ்வேறு படங்களில் நடித்து வருகின்றனர்.

ஜெய் பீம், சூரரைப் போற்று என அடுத்தடுத்து ஹிட்களை கொடுத்த சூர்யா யாருமே எதிர்பார்க்காத வண்ணம் ‘விக்ரம்’ படத்தில் வில்லனாக தோன்றி மிரட்டினார். தொடர்ந்து முற்றிலும் வித்தியாசமான லுக்கில் ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அதேபோல நடிகை ஜோதிகாவும் மலையாளத்தில் ‘காதல் டு தி கோர்’, ஹிந்தியில் ‘சைத்தான்’ போன்ற பிற மொழி திரைப்படங்களில் கலக்கி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் விழா ஒன்றில் பேசிய ஜோதிகா மீண்டும் என்னையும், சூர்யாவையும் சேர்த்து நடிக்க வைக்க யாரும் இல்லையா? என்பது போல கேள்வி எழுப்பி இருந்தார்.

அந்த வருத்தத்தை நிவர்த்தி செய்யும் வகையில் தற்பொழுது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது 90ஸ் கிட்ஸின் பேவரைட் சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து நடிக்க இருக்கின்றனர்.

இந்த படத்தை ‘சில்லு கருப்பட்டி’ பட இயக்குனர் ஹலிதா சமீம் அல்லது ‘பெங்களூர் டேஸ்’ திரைப்பட இயக்குனர் அஞ்சலி மேனன் இயக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த ஜோடி திரையில் மீண்டும் தோன்றினால் கண்டிப்பாக படம் ஹிட்டடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இதன் மூலம் சூர்யா-ஜோதிகா தம்பதியர் 18 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியங்கா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கவினின் ஸ்டார் ரிலீஸ் தேதி இதுதான்..!

Rathnam: அடிச்சது ஜாக்பாட்…சோலோவாக களமிறங்கும் விஷால்… காரணம் என்ன?

ஈஷா தன்னார்வலர் மாயமான வழக்கு : காவல்துறை பதில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel