ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நடிகர் சூர்யாவின் 44-வது படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தை சூர்யாவின் 2D என்டர்டைன்மென்ட் நிறுவனம் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.
சூர்யா 44 படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.
இந்நிலையில் சூர்யா 44 படத்தின் ஷூட்டிங் குறித்த ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சூர்யா 44 திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் வரும் ஜூன் முதல் வாரத்தில் இருந்து தொடங்கும் என்றும், முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் 40 நாட்கள் நடத்த படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும், படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு ஊட்டி மற்றும் மற்ற பகுதிகளில் படமாக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
தற்போது நடிகர் சூர்யா “கங்குவா” படத்தின் பணிகளை முழுமையாக முடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 43 வது படமான “புறநானூறு” படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு வெற்றிமாறன் – சூர்யா கூட்டணியில் உருவாகும் “வாடிவாசல்” படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
11 மாதங்களாக சிறை… செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா?
1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் வேலைவாய்ப்பு நிறுவனம்!