தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான யுவி கிரியேஷன்ஸ் வம்சி பிரமோத் உடன் இணைந்து சூர்யா நடிக்கும் 42வது திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார். படத்தை சிறுத்தை சிவா இயக்கிவருகிறார்.
இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு இந்தி நடிகை திஷாபதானி ஜோடியாக நடிக்கிறார். யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார்.
வரலாற்றுக் தரவுகளை பின்னணி கதைகளமாக கொண்டு நிகழ் காலத்தையும் பிரதிபலிக்கும் வகையில் இப்படத்தின் திரைக்கதை எழுதப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. திட்டமிட்டதைவிட மேலும் இரண்டு மாதங்கள் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
சூர்யா நடிக்கும் படங்களுக்கு சர்வதேச அளவில் இருக்கும் வியாபாரத்திற்கு ஏற்புடையதாக படத்தின் செலவுகள் இல்லை. அதனால் திரைக்கதையில் சில மாற்றங்களை செய்து இரண்டு பாகங்களாக வெளியிட தயாரிப்பாளர்கள் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் தயாரிப்பாளர்கள் மற்றும் படத்தில் பணியாற்றுபவர்கள் என அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களாம்.
இராமானுஜம்
காட்டாற்று வெள்ளம்: இழுத்து செல்லப்பட்ட பெண்கள்!
காசி தமிழ் சங்கத்தில் மாமனிதன்: தேர்வானது எப்படி?