நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக நடிக்கவிருக்கும் ஜெயிலர் படத்தின் பர்ஸ்ட் லுக்கை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இன்று (ஆகஸ்டு 22) வெளியிட்டுள்ளது.
அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
ஜெயிலர் படத்தின் அடுத்த அப்டேட் இன்று (ஆகஸ்ட் 22) 11 மணிக்கு வெளியிடப்படும் என்று சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது. இந்த ட்விட்டர் பதிவினால் ரசிகர்கள் அடுத்த அப்டேட்டிற்காக காத்திருந்தார்கள்.
அதனை தொடர்ந்து, தற்போது ஜெயிலர் படத்தில் நடிக்கும் ரஜினிகாந்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இணையத்தில் டிரண்டாகி வருகிறது.
ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியுள்ளது. ஹீரோயின் யார், மற்ற நடிகர்கள் யார் உள்ளிட்ட குழுவினர் குறித்த அறிவிப்பு தற்போது வரை அறிவிக்கப்படவில்லை.
மோனிஷா
இன்று வெளியாகிறது ஜெயிலர் படத்தின் புதிய அப்டேட்!