மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என 4 வெற்றிப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ்.
மாஸ்டருக்கு பிறகு நடிகர் விஜய்யுடன் மீண்டும் கைகோர்த்துள்ள அவர் லியோ படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
இதற்கிடையே ரஜினிகாந்தின் 171 வது திரைப்படத்தை அவர் இயக்குகிறார் என்று தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக சமீபத்தில் அறிவித்தது. தன்னை கமல்ஹாசன் தீவிர ரசிகராக காட்டிக் கொள்ளும் லோகேஷ் ரஜினி படத்தை இயக்குகிறாரா என்று ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
இந்த நிலையில் சூலூரில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்காக கோவை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த் காரில் இருந்தபடி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “லோகேஷ் கனகராஜூடன் இணையும் திரைப்படம் இன்னும் லேட்டாகும். ஞானவேல் இயக்கும் திரைப்படத்தில் நடித்து முடித்த பின்னர் தான் அந்தத்திரைப்படத்தில் நடிப்பேன்.
லோகேஷுடன் நான் இணையும் திரைப்படம் டெஃபனட்டா நல்லா வரும். அதுவரை காத்திருங்க” என்று கூறி சென்றார்.
ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ’ஜெய்பீம்’ புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். அதிலும் அனிருத் தான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
கீர்த்தி சுரேஷுக்கும் அனிருத்துக்கும் திருமணமா?
உரிமைத் தொகையை பறிக்கும் வங்கிகள்: அமைச்சர் எச்சரிக்கை!