சூப்பர் குட் பிலிம்ஸின் 100ஆவது படத்தில் விஜய்?

சினிமா

தமிழ் சினிமாவில் அதிகமான புதிய இயக்குநர்களுக்கு படங்களை இயக்கும் வாய்ப்புக்களை வழங்கியது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம்.

1988ஆம் ஆண்டு மலையாளத்தில் ஆதிபாபம் படம் தயாரிப்பு மூலம் திரைப்பட துறையில் நுழைந்தது. சுமார் 8 லட்சம் ரூபாயில் தயாரிக்கப்பட்ட இந்தப்படம் தமிழில் முதல் பாவம் எனும் பெயரில் வெளியானது.

சுமார் 2.5 கோடி ரூபாய் வருமானத்தை இந்தப் படத்தின் மூலம் சூப்பர்குட் பிலிம்ஸுக்கு கிடைத்தது. கடந்த 33 வருடங்களில் தமிழ், தெலுங்கு,மலையாள மொழிகளில் 98 படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளது.

99வது படமாக சூப்பர் குட் சௌத்ரியின் மகனும், நடிகருமான ஜீவா நடிக்கும் வரலாறு முக்கியம் தயாரிப்பில் உள்ளது.

100 வது படத்தில் நடிக்கப்போகும் நடிகர் யார் என்கிற கேள்விக்கு ஜீவா தற்போது பதில் கூறியுள்ளார்.

நடிகர் ஜீவா ‘ஆஹா’ ஓடிடித் தளத்தில் ‘சர்கார் வித் ஜீவா’ என்ற விளையாட்டு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சியின் புரமோஷனில் கலந்துகொண்ட ஜீவா பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது, ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 100வது படத்தில் விஜய் நடிப்பாரா?’ என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த நடிகர் ஜீவா, ”நிச்சயமாக நடிப்பார். ஒரு வாரம் முன்புதான் ஆர்.பி.சௌத்ரியை விஜய் சந்தித்திருக்கிறார்.

100-வது படத்தில் நடிக்கிறேன் என்பது போல் கூறியிருக்கிறார். நானும் அதில் நடிப்பதற்காக என் அப்பாவிடம் கேட்டிருக்கிறேன். சம்பளம் கொடுக்கவில்லை என்றாலும் நடிக்கத் தயாராக இருக்கிறேன்.

சூப்பர் குட் ஃபிலிம்ஸ் இயக்கும் 100-வது படத்தில் விஜய் தான் நடிப்பார் எனத் தெரிகிறது” எனக் கூறியுள்ளார்.

விஜய் திரையுலக வாழ்க்கையில் திருப்பு முனையையும், வியாபார முக்கியத்துவம் உள்ள நடிகராக மாற்றங்களை ஏற்படுத்திய பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும், காதலுக்கு மரியாதை, திருப்பாச்சி ஆகிய படங்களைத் தயாரித்தது சூப்பர்குட் பிலிம்ஸ்.

ஷாஜகான், ஜில்லா ஆகிய படங்களுடன் சேர்த்து சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆறு படங்களில் விஜய் நடித்துள்ளார்.

இராமானுஜம்

பொன்னியின் செல்வனை அடுத்து வேள்பாரி: பாரியாகும் கே.ஜி,எப்.ராக்கி

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published.