Sunny Leones lip injury

சன்னி லியோன் உதட்டில் காயம்: பதறி வரும் ரசிகர்கள்!

சினிமா

பாலிவுட் நடிகை சன்னி லியோன் உதட்டில் காயம் பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கும் நிலையில், அவருக்கு என்ன ஆனது என்று ரசிகர்கள் பலரும் வருத்தமடைந்து வருகின்றனர்.

ஆபாச படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். அதன்பிறகு பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இரக்க குணம் படைத்த சன்னி லியோன் ஏராளமான குழந்தைகளுக்கும் உதவி வருகிறார்.

இதன் காரணமாகவே அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். தமிழில் சமீபத்தில் அவர் நடிபில் ஓ மை கோஸ் திரைப்படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. சன்னி லியோன் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பவர்.

அவர் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்வது வழக்கம். அந்த வகையில், சமீபத்தில் அவர் பகிர்ந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

மும்பையில் வீடு வாங்கி கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வரும் சன்னிலியோன் இன்ஸ்ட்டாகிராமில் அண்மையில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

உதட்டில் காயம் இருப்பது போன்று அந்த வீடியோவில் காட்டும் சன்னி, தனது கணவர் அதைப்பற்றி கவலையில்லாமல் தூங்குவதாகக் கூறுகிறார். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதையடுத்து அதற்கு அவரே விளக்கமும் கொடுத்துள்ளார். யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.

என் உதடு காயத்திற்கு காரணம் மொபைலே தவிர! வேறு யாரும் இல்லை செல்பி எடுக்க, மொபைல் போனை மேலே தூக்கி பிடிக்கும் போது அது நழுவி  முகத்தில் விழுந்தது.

அது உதட்டில் விழுந்ததால் பலமாக அடிபட்டு ரத்தம் வழிந்தது என்று சன்னி பதிவிட்டுள்ளார்.

கலை.ரா

“சேவாக்கிற்கு கிடைத்த சுதந்திரம் எனக்கு கிடைக்கவில்லை” – முரளி விஜய்

எம்ஜிஆர் பிறந்தநாள்: உறுதிமொழி எடுத்த எடப்பாடி

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *