‘மாயா ஒன்’ டீசர்: புது சூப்பர் ஹீரோ.. பிரம்மிக்க வைக்கும் காட்சிகள்..

மாநகரம், மாயவன், கேப்டன் மில்லர் போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன். தற்போது இவரது நடிப்பில் மாயவன் படத்தின் இரண்டாம் பாகமான “மாயா ஒன்” படம் உருவாகி உள்ளது.

மாயவன் படத்தை இயக்கிய சி. வி. குமார் தான் மாயா ஒன் படத்தையும் இயக்கியுள்ளார்.

இவர் ஆட்டகத்தி, பீட்சா, சூது கவ்வும் போன்ற வெற்றி படங்களை தயாரித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாயா ஒன் (MAAYA ONE) படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

ஏ.கே. என்டர்டெயின்மென்ட், அட்வென்சரஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் ஆகிய இரு  நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது.

இந்நிலையில் தற்போது மாயா ஒன் படத்தின் டீசரை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

மனிதர்களின் மூளையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பல தீய செயல்களை செய்யும் வில்லன். இந்த ஆபத்தில் இருந்து மனித இனத்தை காப்பாற்ற சூப்பர் பவர் உள்ள ஹீரோ போராடுகிறார் என்பதே இந்த படத்தின் ஒரு லைன் கதை. டீசரில் பல VFX காட்சிகள் இடம்பெற்றுள்ளது. நடிகர் சந்தீப் கிஷன் கையில் ஒரு வித்தியாசமான கிளவுஸ் அணிந்து கொண்டு ஒரு பக்கா சூப்பர் ஹீரோவாக காட்சியளிக்கிறார்.

இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் ஏற்கனவே தமிழில் நடிகர் விஜய்யின் கத்தி படத்தில் வில்லனாக நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கூடிய விரைவில் மாயா ஒன் படத்தின் மற்ற தகவல்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது!

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்த வேண்டும் : சென்னை உயர் நீதிமன்றம்!

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts