2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தமிழ் படங்களை விட மற்ற மொழி திரைப்படங்கள் தான் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய அளவில் வசூலை செய்து வருகிறது.
தமிழ் சினிமாவின் நிலை குறித்து கவலைப்பட்டுக் கொண்டிருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் கடந்த மே 3 ஆம் தேதி வெளியான அரண்மனை 4 திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் மெயின் ஹீரோவாக சுந்தர்.சி நடிக்க, இவருடன் நடிகர்கள் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, VTV கணேஷ், கோவை சரளா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பாக் என்ற பேயை மையமாக வைத்து அரண்மனை 4 கதையை எழுதி இருந்த சுந்தர் சி, இந்த படத்திற்கு தேவையான திகில் காட்சிகள், காமெடி காட்சிகள், சென்டிமென்ட் காட்சிகள் என அனைத்தையும் சரியாக திரைக்கதையில் சேர்த்தது மட்டுமின்றி,
படத்தின் இறுதியில் அம்மன் பாடல், அம்மன் சிலையின் கிராஃபிக்ஸ் என பிரம்மாண்டமாக காட்சிப் படுத்தி ஃபேமிலி ஆடியன்ஸை திருப்தி படுத்திவிட்டார்.
அரண்மனை 4 திரைப்படம் வெளியான அடுத்த வாரங்களில் கவினின் ஸ்டார், சந்தானத்தின் ’இங்க நான் தான் கிங்கு’ ஆகிய திரைப்படங்கள் வெளியானாலும் அரண்மனை 4 திரைப்படத்தின் வசூலில் எந்த பாதிப்பும் இல்லை.
இந்நிலையில் அரண்மனை 4 திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த முதல் ஹிட் படம் அரண்மனை 4 தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அரண்மனை 5 திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
காதல் …மனம் திறந்த VJ அர்ச்சனா
IPL-இல் யாரும் செய்யாத சாதனையை செய்த விராட் கோலி
இந்தியன் 2 ஆடியோ லான்ச் கெஸ்ட் இவரா..?
வேலைவாய்ப்பு : சென்னை ஐசிஎஃப் ஆலையில் பணி!