அரண்மனை 4 ரிலீஸ் தேதி அறிவிப்பு: ஏலியனா? பேயா? வெற்றி யாருக்கு?
சுந்தர்.சி இயக்கிய “அரண்மனை” சீரிஸ் படங்களுக்கென தமிழ்நாட்டில் ஒரு தனி Fan Base உள்ளது. அரண்மனை 1,2 படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய ஹிட் அடித்தது. ஆனால் அரண்மனை 3 படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்திருந்தாலும் வசூல் ரீதியாக அந்த ஆண்டின் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் பட்டியலில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டது.
அதன் பிறகு அரண்மனை 4 படத்தை இயக்கப் போவதாக சுந்தர்.சி அறிவித்திருந்தார். அந்த படத்தில் விஜய் சேதுபதி, சந்தானம் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால், ஏதோ சில காரணத்தினால் விஜய் சேதுபதி இந்த படத்திலிருந்து விலகுவதாக அறிவிக்க, மெயின் ஹீரோவாக சுந்தர்.சி நடிப்பார் என தகவல் வெளியானது.
இந்நிலையில் அரண்மனை 4 படத்தின் தயாரிப்பாளரும் நடிகையுமான குஷ்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அரண்மனை 4 படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அரண்மனை 4 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை குஷ்பு வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டரில் 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு அரண்மனை 4 திரைப்படம் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அரண்மனை 4 படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, VTV கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு தான் சிவகார்த்திகேயனின் “அயலான்” திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்ற அறிவிப்பு வந்தது. தற்போது அரண்மனை 4 படமும் பொங்கல் அன்று வெளியாக இருப்பதால், இந்த பொங்கல் ரேஸில் ஜெயிக்கப் போவது “ஏலியனா? பேயா?” என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
– கார்த்திக் ராஜா
2070-ல் நடக்கும் கதை: பாய்ந்து அடிக்கும் டைகர்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!