நடிகை சுகன்யாவுக்கு இவ்வளவு கொடுமைகள் நடந்ததா? விவரிக்கும் டைரக்டர்

கடந்த 1990 களில் தமிழ் சினிமாவில் ராதிகா, மீனா, ரம்யா கிருஷ்ணன், ஊர்வசி , ரேவதி, ஷோபனா ஆகியோர் கொடிக்கட்டி பறந்த காலத்தில் 1991 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சுகன்யா. புது நெல்லு புது நாத்து இவரின் முதல்படம்.

தொடர்ந்து, விஜயகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ் , பிரபு என முன்னணி நடிகர்களுடன் நடித்தார். மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் ஆகியோருடன் ஹிட் படங்களை சுகன்யா கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், மலையாள டைரக்டர் ஆலப்பே ஆஷ்ரப், சுகன்யாவின் சொந்த வாழ்க்கை குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், அவர் கூறியதாவது, ‘நடிகை சுகன்யா சினிமாவின் உச்சக்கட்டத்தில் இருந்த போது, அமெரிக்க தொழிலதிபரை மணந்தார். பெரும் கனவுடன் அமெரிக்காவுக்கு பறந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கணவரால் அடிக்கடி கொடுமைப்படுத்தப்பட்டார். சில காலமே இந்த திருமணம் நீடித்தது. பிறகு, விவாகரத்தில் முடிந்தது. பின்னர், சென்னை திரும்பிய அவர் மீண்டும் சினிமாக்களில் நடிக்க ஆரம்பித்தார்.

தற்போது, 54 வயதாகும் சுகன்யா சென்னையில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரின், சகோதரிக்கு தற்போது ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுதான், சுகன்யாவின் வாழ்க்கையில் இப்போது நடந்துள்ள நல்ல விஷயம். அந்த குழந்தையை தன் குழந்தை போல பாவித்து சுகன்யா வளர்த்து வருகிறார். திருமணத்தால் தனது சினிமா வாழ்க்கையை இழந்தார். கனவுகளை இழந்தார். இப்போது, தனிமைதான் அவருக்கு எஞ்சியிருக்கிறது. அவ்வளவு வேதனைகளையும் கடந்து சென்னையில் தற்போது, அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்’ என்று தெரிவித்துள்ளார்.

நடிகை சுகன்யாவுக்கு கடந்த 2002-ம் ஆண்டு ஸ்ரீதரன் என்பவருடன் திருமணம் ஆனது. சுகன்யாவின் கணவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர் என்பதால் இவர்களது திருமணம் அமெரிக்காவில் தான் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர் கணவருடன் அமெரிக்காவிலேயே செட்டில் ஆனார். திருமண வாழ்க்கை முறியவே மீண்டும் தாய்நாடு திரும்பினார் சுகன்யா.

சமீபத்தில் , பேட்டி ஒன்றில் நடிகை சுகன்யா கூறுகையில், தான் இன்னொரு முறை திருமணம் செய்ய மாட்டேன். பெண்மையின் வலிமையை உணர்த்தும் வகையில் வாழப் போவதாக தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

-எம்.குமரேசன்

பி.வி சிந்துவுக்கு திருமணம்… மணமகன் யார் தெரியுமா?

போதை பழக்கத்தை தடுக்க புதிய திட்டம்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts