மலையாள திரையுலகம் நடிகைகள் பணி புரிய ஏற்ற இடமில்லை என்று நடிகை சுகாஷினி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மலையாள திரையுலகில் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிட்டிருந்தது. இதையடுத்து, புற்றீசல் போல நடிகர்கள் மீது நடிகைகள் புகார் அளித்தனர். தமிழ் பட நடிகை ராதிகா, கேரவன் கூட மலையாள திரையுலகில் பாதுகாப்பானதாக இல்லை என்று பகிரங்கமாக கூறியிருந்தார்.
இந்த நிலையில், நடிகை சுகாஷினி கோவாவில் நடந்து வரும் சர்வதேச திரைப்பட விழாவில் சினிமாவில் பெண்கள் பாதுகாப்பு குறித்த தலைப்பில் பேசினார். மலையாள திரையுலகம் குறித்து சில விஷயங்களை பேசியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, சினிமா உலகம் மற்ற வேலைகளில் இருந்து வேறுபட்டது. ஒரு நாளில் 200 பேர் பணியாற்றுவோம். அப்படியே அங்கேயே குடும்பம் போல தங்கியிருப்போம். தெரிந்தோ தெரியாமலே எல்லை மீறத்தான் செய்வார்கள்.
ஒரு முறை என் கணவர் மணிரத்னத்திடம் உங்கள் செட்டில் பணியாற்றுபவர் எல்லை மீறினால் என்ன செய்வீர்கள் ? என்று கேட்டேன். அதற்கு, உடனடியாக அவரை வெளியே அனுப்பிவிடுவேன் என்று கூறினார்.
தெலுங்கு, தமிழ், கன்னட சினிமா போல மலையாள திரையுலகில் குடும்பம் போல பார்க்கும் தன்மை இல்லை. அதனால்தான், அங்கே எல்லை மீறப்படுகிறது” என்றார்.
சமீபத்தில் மலையாள நடிகர்கள் மீது பாலியல் புகார் அளித்த நடிகை ஒருவர், அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி தனது புகாரை வாபஸ் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் . அந்த நடிகை, நடிகர் முகேஷ் உள்பட 7 பேர் மீது புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ஜனாதிபதிக்கு எதிரான கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் வாபஸ் : எஸ்.எஃப்.ஐ அறிவிப்பு!
நவம்பர் 26: அரசமைப்புச் சட்ட நாள்- பிசாசுகளை விரட்ட கோயிலை எரிப்பதா?