சூர்யா 43 அப்டேட் இதோ!

சினிமா

2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் எக்ஸ் பக்கத்தில் ஓர் புதிய படத்தின் அப்டேட் வெளியாக இருப்பதை  குறிப்பிடும் வகையில் “இன்னும் 43 மணி நேரம்” என்று அக்டோபர் 24 இரவு 9 மணிக்கு பதிவிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் சூர்யா 43 படம் குறித்த அப்டேட் தான் வெளியாக போகிறது என்று தங்கள் கருத்துகளை கூறிவருகின்றனர்.

சூர்யா 43 படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிகர் சூர்யா கல்லூரி மாணவராக நடிக்க போகிறார் என்றும் நடிகர் துல்கர் சல்மான் மற்றும் நடிகை நஸ்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் சூர்யாவுடன் இணைந்து நடிக்க இருக்கிறார்கள் என்றும் சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது.

இந்நிலையில் இன்று அக்டோபர் 26ஆம் தேதி மாலை 4 மணிக்கு வெளியானது. தற்போது நடிகர் துல்கர் சல்மான் மற்றும் நடிகை நஸ்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் சூர்யாவுடன் இணைந்து நடிக்க இருக்கிறார்கள் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டைட்டிலில் புறநானூறு என்ற வார்த்தை மட்டும்  வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டைட்டிலின் முதல் வார்த்தை சஸ்பென்ஸாக வைக்கப்பட்டுள்ளது. சூர்யா 43 படம் ஜி வி பிரகாஷ் இசையமைக்கும் 100 வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

– கார்த்திக் ராஜா

பெட்ரோல் குண்டு வீச்சு – நியாயமான விசாரணை இல்லை: ஆளுநர் மாளிகை!

திராவிட மாடலுக்குள் திருவண்ணாமலை மாடல்?  என்ன செய்தார் எ.வ.வேலு?

பிறந்தநாளில் புரொபோசல்… அமலாபால் ரியாக்சன்: க்யூட் வீடியோ!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *