சிம்பு பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க தயாராகும் கமல்

சினிமா

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற வெற்றி படத்தை இயக்கியவர் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி. தற்போது நடிகர் சிலம்பரசனின் 48வது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார், ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கிறார்.

STR 48 படத்திற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூடிய விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது  ஒரு “Period Film” என்று இயக்குனர் தேசிங்கு பெரியசாமி கூறியிருந்தார். இந்த படத்தில் சிம்புவின் கெட்டப் டிரெண்ட் செட்டராக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்று (ஜனவரி 31) STR 48 படம் குறித்த அப்டேட்டை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.

அந்த பதிவில், “STR 48 படத்தின் First  Twinkle பிப்ரவரி 2-ஆம் தேதி வெளியாகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தான் First Twinkle என்று படக்குழு குறிப்பிட்டுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வரும் பிப்ரவரி 3ஆம் தேதி சிம்புவின் பிறந்தநாள் வர உள்ள நிலையில், பிப்ரவரி 2ஆம் தேதி STR 48 பர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கார்த்திக் ராஜா

இனி Paytm-ல் பண பரிமாற்றம் கிடையாது : ரிசர்வ் வங்கி அதிரடி!

பிஜேபி கூட்டணிக் குழு: அப்டேட் குமாரு

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *